- Home
- Cinema
- நயன்தாரா கூட இப்படி பண்ண மாட்டாங்க! வயசுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட அனிகா..!
நயன்தாரா கூட இப்படி பண்ண மாட்டாங்க! வயசுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட அனிகா..!
கல்லூரியில் நடைபெற்ற தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை அனிகா, வயதுக்கு மீறி நடந்து கொண்டது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், கதாநாயகியாக மாறிய பல நடிகைகள் உள்ளனர். குறிப்பாக ஸ்ரீதேவி, மீனா, பேபி ஷாலினி, போன்றவர்கள் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தது மட்டுமின்றி.. ஹீரோயினாகவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் - திரிஷா நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அஜித் நயன்தாரா இணைந்து நடித்த 'விஸ்வாசம்' படத்திலும் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு மகளாக 'மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மா என்கிற குறும்படத்தில் பள்ளி நாட்களில் கர்ப்பமாகும் கதாபாத்திரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்த அனிகா, ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'குயின்' வெப் சீரிஸிலும் சிறிய வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். மேலும் மலையாளத்திலும், மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்து வெளியான 'புட்டபொம்மா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'கப்பேலா' என்கிற படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்தில் சுடிதார் அணிந்து மிகவும் அடக்கம் ஒடுக்கமாக நடித்த அனிதா, தன்னுடைய இரண்டாவது படத்தில் கவர்ச்சி அலப்பறை செய்திருந்தார். மலையாளத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை டார்லிங்' படத்தில் லிப் லாக் காட்சியிலும் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
முத்த காட்சிகள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்த அனிகா சுரேந்திரன், கதைக்கு தேவை என இயக்குனர் கூறியதால் லிப் லாக் காட்சியில் நடித்ததாக தெரிவித்தார்.
தற்போது அனிகா இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, வயதுக்கு மீறி நடந்து கொண்ட விதம் தான் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. விழா மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவரை பேச அழைத்த போது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து, ஓவர் ஸ்டைலாக நின்று பேசியுள்ளார். இவர் நடந்து கொண்டதை பார்த்து நெட்சங்கள் பலர் நடிகை நயன்தாரா கூட அவருடைய வயதில் இதுபோல் ஆட்டிடியூட் காட்டியது இல்லை, ஆனால் 17 வயதில் இவரின் அளப்பறை தாங்க முடியவில்லை என விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.