குஷி ஜோதிகாவுக்கு போட்டியா? கருப்பு சேலையில் எலுமிச்சை நிற இடையை காட்டிய கீர்த்தி சுரேஷை சொக்கி போன ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ், குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை என்பதை தாண்டி ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதால், ரசிகர்களை மயக்கும் ஆடைகளுடன், அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு சொக்க வைத்து விடுகிறார்.
எந்த உடை அணிந்தாலும், பேரழகியாக ஜொலிப்பதும்... திரைப்படத்தில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஒன்றி போய் நடிப்பதும் இவரின் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.
இதற்க்கு மிகப்பெரிய உதாரணமாகவே அமைந்தது 'மகாநடி' திரைப்படம், இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை... சாவித்திரியை திரையில் பார்த்தது போல் உணர்ந்ததாக கூறினர். இது போன்ற விமர்சனங்கள் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருந்து முன்னேறி... முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த கீர்த்தி சம்பளத்தை உயர்த்தியது மட்டும் இன்றி, நடித்தால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார்.
அம்மாடியோவ்...ஒரு ஆஸ்கர் விருதுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ராஜமௌலி? ஷாக்கிங் தகவல்.!
மேலும் மகாநடி படத்திற்கு பின்னர்... தமிழில் இவர் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பென்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்த போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை. எனவே தற்போது கவர்ச்சி ரணகளம் செய்ய தயார் என மறைமுகமாக சொல்வது போன்று... அவ்வப்போது ஹாட் மாடர்ன் உடையிலும்... சேலையிலும் மாறி மாறி போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, குஷி பட ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில்... கருப்பு நிற சேலையில், இடையழகை காட்டியபடி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.