MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யாரும் எதிர்பார்க்காத செம்ம ட்விஸ்ட்.? ரகசிய திருமணம் உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

யாரும் எதிர்பார்க்காத செம்ம ட்விஸ்ட்.? ரகசிய திருமணம் உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்துள்ளனர்.   

3 Min read
Author : manimegalai a
| Updated : Oct 15 2022, 10:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து 'நானும் ரவுடிதான்' என்கிற படத்தை இயக்கினார்.  இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும், இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இதை இதைத்தொடர்ந்து வெற்றிகரமாக 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாகவும்  இருந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

இந்நிலையில் 'நெற்றிக்கண்' படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, தொகுப்பாளர் டிடி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை காட்டி, அதில் அவர் அணிந்திருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அது தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரம் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் செய்திகள்: வாடகை தாய் விவகாரத்திற்கு புற்றுப்புள்ளி..! ஆதாரங்களை சமர்ப்பித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் விளக்கம்!
 

39

ரகசியமாக தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்தாலும், திருமணம் அனைவருக்கும் அறிவித்து பிரமாண்டமாக  நடைபெறும் என நயன்தாரா கூறி இருந்தார். எனவே விரைவில் நயன்தாரா திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
 

49
Image: Vignesh Shivan/Instagram

Image: Vignesh Shivan/Instagram

முதலில் திருப்பதியில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,  பின்னர் இவர்களுடைய திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாலும், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகவும், மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கண்ணாடி மாளிகையில் இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. தங்களின் திருமணத்தை ஒரு திருவிழா போல் கொண்டாடிய நயன் - விக்கி இருவரும் தொடர்ந்து தங்களின் படபிடிப்புகளிலும் கவனம் செலுத்தி வந்தனர்.

மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் எடுக்கும் ஆர்வம் வந்தது எப்படி..? படம் உருவான விதம்... மனம் திறந்த மணிரத்னம்! வீடியோ
 

59

அதே போல் அவ்வப்போது ஹனி மூனுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தனர். தற்போது நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  கடந்த வாரம் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்தனர்.

69

வாடகை தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் இவர்களை சுற்ற தொடங்கியது. அதாவது திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், அதேபோல் கணவன் - மனைவி, இருவரில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால் திருமணம் ஆன 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இந்த முடிவெடுக்க காரணம் என்ன? இவர்கள் முறையாக நிபந்தனைகளை பின்பற்றி குழந்தை பெற்றுள்ளார்களா அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை மீறப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுந்தன.

மேலும் செய்திகள்: Biggboss Promo: ஜிபி முத்துவை நிற்க வைத்து கலாய்த்த கமல்..! பாதாம்மை காட்டியது தப்பா போச்சே..?
 

79

இந்த பிரச்னை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.  மேலும் நயன் - விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள உதவிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து,  நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

89

இந்த விசாரணையின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். பின்னர் தங்களுக்கு  6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மியின் பிரமாண்ட லக்ஸூரி ஹவுஸ்..! பிரமிக்க வைத்த புகைப்படங்கள் இதோ!
 

99

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவகாரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர் நயன் - விக்கி தம்பதி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image2
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Recommended image3
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved