சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மியின் பிரமாண்ட லக்ஸூரி ஹவுஸ்..! பிரமிக்க வைத்த புகைப்படங்கள் இதோ!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி தங்களின் சொந்த ஊரில் மிகவும் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி குடிபோய் உள்ளனர். ஆச்சர்யப்படுத்தும் அந்த வீட்டின் புகைப்படங்கள் இதோ...
பல திறமையான கலைஞர்களை கண்டுபிடித்து, அவர்களின் அபார திறமையை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டுவதில், விஜய் டிவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு முறை தோன்றி விட்டாலே அவர்களை அதிஷ்டமும் தொற்றி கொள்ளும். குறிப்பாக பலரின் கனவுகளுக்கு வண்ணம் தீட்டி, அவர்கள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றியுள்ளது.
மேலும் செய்திகள்: GP Muthu: பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து..! வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
அதிலும் குறிப்பாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், திறமையை வெளிக்காட்டி.. முன்னணி பின்னணி பாடகர் - பாடகியாக உள்ளவர்கள் ஏறாமல். மேலும் திறமையை யூடியூப் மூலமாகவும் வெளிப்படுத்தி பலர் கல்லா கட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் கணவன் - மனைவியாக கலந்து கொண்டு, கிராமத்து மனம் கமழும், நாட்டுப்புற பாடல்களை படி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி.
மேலும் செய்திகள்: வழவழப்பான தங்க நிற உடையில்... பாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வரியா ராஜேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்!
இந்த நிகழ்ச்சியில் ராஜலக்ஷ்மி பைனலுக்கு வரவில்லை என்றாலும், செந்தியில் கணேஷ் பைனலில் ... வெற்றி வாகை சூடினார். இதற்காக அவருக்கு விஜய் டிவி வழங்கிய 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது.
விஜய் டிவி மூலம் கிடைத்த வெற்றியையும், பிரபலத்தையும் சரியாக பயன்படுத்தி கொண்ட செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவரும், தற்போது பல படங்களில் பின்னணி பாடி வருவது மட்டும் இன்றி, வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
உள்ளூரிலும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருமே தற்போது சினிமா பின்னணி பாடகர் - பாடகி என்பதால் இவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு கூட்டமும் அள்ளுகிறது.
மேலும் செய்திகள்: Biggboss Promo: விசாரிப்பதற்கும் கேட்பதற்கும் நிறைய கேள்விகள் உள்ளது! முதல் வாரத்திலேயே அதிரடி காட்டும் கமல்!
இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் இவர்கள், மிக குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து வீடு, கார், நகை என பிளான் போட்டு செலவு செய்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தங்களுடைய சொந்த ஊரில், மிகவும் கச்சிதமான வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்த இந்த ஜோடி தற்போது பிரமாண்ட லக்ஸூரி வீட்டை காட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரிய.. பெரிய வீடுகள் அமைந்துள்ள இடத்தில் தான் இப்போது இவர்கள் பிரமாண்ட வீடு ஒன்றை காட்டியுள்ளனர். இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: தூய்மை முக்கியம்... சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் சார்பாக நவீன வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சிவகுமார்!
செந்தில் - ராஜலக்ஷ்மியின் கனவு வீடான இதில், ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்துள்ளனர். இந்த வீட்டின் கிரகப்ரவேசத்தையம் குடும்பத்தினருடன் பிரமாண்டமாக இவர்கள் செய்து முடித்துள்ள நிலையில், பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.