- Home
- Cinema
- தனுஷ் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஃபேமிலியோடு நெருக்கம்..! மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாவ கவனிச்சீங்களா?
தனுஷ் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஃபேமிலியோடு நெருக்கம்..! மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாவ கவனிச்சீங்களா?
நடிகர் தனுஷும், மிருணாள் தாக்கூரும் காதலிப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், இன்ஸ்டாவில் மிருணாள் தாக்கூரின் செயல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

Dhanush Mrunal Thakur Dating Rumors
கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருவது தனுஷ் - மிருணாள் தாக்கூரின் காதல் விவகாரம் தான். சமீப காலமாக இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். குறிப்பாக நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் நடித்து வருவதால், அங்கு நடைபெறும் பார்ட்டிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு வருகிறார். இந்த பார்ட்டிகளில் பெரும்பாலும் மிருணாள் தாக்கூர் உடன் தான் அவர் ஜோடியாக கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தனுஷ் சகோதரிகளை ஃபாலோ பண்ணும் மிருணாள் தாக்கூர்
நடிகர் தனுஷுடன் மிருணாள் தாக்கூர் நெருக்கமாக இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தனுஷின் சகோதரிகளை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிருணாள் தாக்கூர், தனுஷின் சகோதரிகளான டாக்டர் கார்த்திகா மற்றும் விமலா கீதாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதாக ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷோடு மட்டுமல்ல தனுஷின் ஃபேமிலியோடும் மிருணாள் தாக்கூர் நெருக்கமாகிவிட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ் காதல் கிசுகிசு
மும்பையில் நடைபெற்ற தனது 'சன் ஆஃப் சர்தார் 2' படத்தின் சிறப்பு காட்சியின் போது தனுஷுடன் இருந்த மிருணாள் தாக்கூரின் வீடியோ வைரலான சில நாட்களுக்குப் பிறகு, தனுஷின் சகோதரிகளை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய நாட்களில் தனுஷும் மிருணாலும் நெருக்கமாக இருப்பதாக இந்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. மும்பையில் நடைபெற்ற 'சன் ஆஃப் சர்தார் 2' பட நிகழ்வில் தனுஷும் மிருணாலும் பேசிக்கொண்டிருந்த வீடியோ கிளிப் வெளியானதிலிருந்து இந்த வதந்தி பரவத் தொடங்கியது.
சைலண்டாக இருக்கும் தனுஷ் - மிருணாள் தாக்கூர்
ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்ற மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் கலந்துகொண்டார். கடந்த மாதம், தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான கனிகா தில்லான் ஏற்பாடு செய்த விருந்திலும் மிருணாள் தாக்கூர் கலந்துகொண்டார். சமீபத்திய பேட்டியொன்றில், காதல் உறவைப் பற்றி தனக்கு சில கண்ணோட்டங்கள் இருப்பதாக மிருணாள் கூறியிருந்தார். தற்போது தென்னிந்திய படங்களில் அதிகம் நடித்து வருகிறார் மிருணாள். இதுவரை இருவரும் இந்த விஷயத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுவரை தனுஷோ மிருணாள் தாக்கூரோ தங்கள் உறவை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
விவாகரத்தில் முடிந்த தனுஷின் முதல் திருமணம்
தனுஷுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணந்திருந்தார். 18 வருடங்கள் இணைந்து வாழ்ந்த பிறகு, கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள். விவாகரத்துக்கு பின்னரும் மகன்களின் பள்ளி விழாக்களில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.