மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் – யார் அந்த காதலி?
Dhanush and Mrunal Thakur Secret Relationships : 2025-ல் நடிகர் தனுஷ் மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கியதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.

தனுஷ் - மிருணாள் தாக்கூர் டேட்டிங்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி முற்றிலுமாக தன்னை சினிமாவிற்காக அர்ப்பணித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
மிர்ணாள் தாக்கூர் - தனுஷ் காதல்
நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக தனுஷ் நடிப்பில் ராயன் படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் சமீபத்தில் குபேரா படம் வெளியானது. முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவில் உருவான இந்தப் படம் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தனுஷ் காதல் கிசுகிசு
தற்போது இட்லி கடை படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த சூழலில் தான் நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் தலவல் வெளியாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சட்டபூர்வமாக பிரிந்த பிறகு, தனுஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.
தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் லவ்
இருப்பினும், இந்த வதந்திகள் குறித்து தனுஷ் அல்லது மிருணாள் தாக்கூர் இருவரும் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் என்ன தான் சீனியர் நடிகராக இருந்தாலும் அவரைப் பற்றி காதல் வதந்திகளும், கிசுகிசுக்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.