MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எனக்கு வருத்தம் பா... ஏஐ மூலம் டோட்டலாக மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்; தன் படத்துக்கே எதிர்ப்பு தெரிவித்த தனுஷ்!

எனக்கு வருத்தம் பா... ஏஐ மூலம் டோட்டலாக மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்; தன் படத்துக்கே எதிர்ப்பு தெரிவித்த தனுஷ்!

தனுஷ் நடித்த ராஞ்சனா திரைப்படம் ஏஐ மூலம் மாற்றப்பட்ட புது கிளைமாக்ஸ் உடன் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளதற்கு நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 04 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dhanush opposes Raanjhanaa re release
Image Credit : Facebook/Dhanush

Dhanush opposes Raanjhanaa re-release

ராஞ்சனா படத்தின் மறுவெளியீட்டிற்கு நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செய்யப்பட்ட மாற்றம்தான் அவரை கோபப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதன் மூலம் படத்தின் ஆன்மா இழந்துவிட்டதாகவும், அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தும் படக்குழுவினர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

24
ராஞ்சனா ஏஐ கிளைமாக்ஸ்
Image Credit : social media

ராஞ்சனா ஏஐ கிளைமாக்ஸ்

12 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒப்புக்கொண்ட படம் இதுவல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைப்படைப்புகளில் மாற்றங்களைச் செய்வது கவலையளிக்கிறது. இது சினிமாவின் பாரம்பரியத்திற்கும் நேர்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தனுஷ் வலியுறுத்தியுள்ளார். அசல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷின் கதாபாத்திரம் இறந்துவிடும். ஆனால், மறுவெளியீட்டில் அவர் மருத்துவமனையில் கண்விழிப்பது போலக் காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Kuberaa : குபேரா படத்துக்காக வெயிட்டான சம்பளம் வாங்கிய தனுஷ்; ராஷ்மிகாவுக்கு இவ்ளோ கம்மியா?
Related image2
நயன்தாராவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்; சைலண்டாக விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?
34
ரிலீசுக்கு ரெடியான ராஞ்சனா 2
Image Credit : Facebook/Dhanush

ரிலீசுக்கு ரெடியான ராஞ்சனா 2

2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தை, ஹிமாஷு சர்மா எழுதி ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இப்படம் மூலம் தான் நடிகர் தனுஷ் இந்தியில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. தேரே இஸ்க் மெயின் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

44
தனுஷ் எதிர்ப்பு
Image Credit : Facebook/Dhanush

தனுஷ் எதிர்ப்பு

ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முதல் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 1ந் தேதி ரீ-ரிலீஸ் செய்தனர். அப்படத்தை விளம்பரப்படுத்தும்போதே ஏஐ மூலம் புது கிளைமாக்ஸ் உடன் இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறினர். இதன் காரணமாகவே இதனை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி இருந்தனர். ஆனால் அந்த ஏஐ கிளைமாக்ஸுக்கு நடிகர் தனுஷ் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
லஞ்சம் வாங்கிய செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீனாவுக்கு வந்த டவுட் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image2
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Related Stories
Recommended image1
Kuberaa : குபேரா படத்துக்காக வெயிட்டான சம்பளம் வாங்கிய தனுஷ்; ராஷ்மிகாவுக்கு இவ்ளோ கம்மியா?
Recommended image2
நயன்தாராவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்; சைலண்டாக விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved