MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாராவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்; சைலண்டாக விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?

நயன்தாராவுக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்; சைலண்டாக விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?

காப்பிரைட் விவகாரத்தில் நயன்தாராவிடம் 10 கோடி கேட்ட தனுஷ், தற்போது சைலண்டாக நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உதவி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 09 2025, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dhanush Help for Vijay
Image Credit : x/production house

Dhanush Help for Vijay

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அண்மையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் இவர் நடித்த குபேரா திரைப்படம் தமிழில் தோல்வி அடைந்தாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன்பின்னர் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி உள்ள தேரே இஸ்க் மெயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லிக்கடை திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

24
தனுஷ் - நயன்தாரா மோதல்
Image Credit : Instagram

தனுஷ் - நயன்தாரா மோதல்

இப்படி பிசியான ஹீரோவாக வலம் வந்தாலும் தனுஷை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் அந்த வீடியோ காட்சியை நீக்காவிட்டால் தனக்கு 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் டென்ஷன் ஆன நயன்தாரா, தனுஷை சரமாரியாக சாடி அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

Related Articles

Related image1
மிட் நைட் பார்ட்டியில் தனுஷ் – என்ன காரணம், பார்ட்டியில் யார் யார் இருக்காங்க தெரியுமா?
Related image2
கவுத்திவிட்ட குபேரா; கமுக்கமாக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த தனுஷ்!
34
வெற்றிமாறனுக்கு அள்ளிக் கொடுத்த தனுஷ்
Image Credit : Instagram

வெற்றிமாறனுக்கு அள்ளிக் கொடுத்த தனுஷ்

இப்படி காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுடன் மல்லுக்கட்டிய தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால் அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் வட சென்னை யூனிவர்ஸை சிம்பு - தனுஷை வைத்து உருவாக்கத் தொடங்கிவிட்டார் வெற்றி.

44
விஜய்க்கு தனுஷ் செய்த உதவி
Image Credit : Instagram

விஜய்க்கு தனுஷ் செய்த உதவி

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படக்குழுவுக்கு தனுஷ் செய்துள்ள உதவி பற்றிய தகவலும் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி தனுஷ் படத்திற்காக ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டதாம். அந்த செட்டில் தனுஷ் பட ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, விஜய்யின் ஜன நாயகன் படக்குழு, தங்கள் படத்தின் பாடல் காட்சியை படமாக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். இதை அறிந்த தனுஷ், உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படி சிம்பு, விஜய் படங்களுக்கு இலவசமாக வாரி வழங்கிய தனுஷ், நயன்தாராவிடம் மட்டும் ஏன் பணம் கேட்டார். அவர்மீது அம்புட்டு கோபமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
ஜன நாயகன்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேவசகாயத்திடம் தொக்கா மாட்டிக்கொண்ட ஜனனி... அலறவிட தயாராகும் ஆலிவர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீனாவுக்கு வந்த டவுட் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image3
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
மிட் நைட் பார்ட்டியில் தனுஷ் – என்ன காரணம், பார்ட்டியில் யார் யார் இருக்காங்க தெரியுமா?
Recommended image2
கவுத்திவிட்ட குபேரா; கமுக்கமாக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த தனுஷ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved