மிட் நைட் பார்ட்டியில் தனுஷ் – என்ன காரணம், பார்ட்டியில் யார் யார் இருக்காங்க தெரியுமா?
Dhanush Celebrates Midnight Party : குபேரா படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில் இப்போது அவர் நடிகைகளுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

மிட் நைட் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்
Dhanush Celebrates Midnight Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நேரடியாக தெலுங்கு சினிமாவில் நடித்த இந்தப் படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நல்லாவே வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
தேரே இஷ்க் மெய்ன் பட பார்ட்டி
இந்தப் படத்திற்காக தனுஷிற்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் நடிகர் சிரஞ்சீவியும் ஒருவர். குபேரா படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
ராஞ்சனா, தேரே இஷ்க் மெய்ன்
இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் தனுஷிற்கு பாலிவுட்டில் நல்ல மார்க்கெட்டை கொடுத்தது. அதன் பிறகு வந்த அட்ராங்கி ரே என்ற படம் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை. இப்போது மீண்டும் ஹிந்தியில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் தனுஷிற்கு எதிர்பார்த்த ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேரே இஷ்க் மெய்ன் மிட்நைட் பார்ட்டி
இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில், படக்குழுவினர் ஒன்றாக இணைந்து மிட்நைட் பார்ட்டி கொண்டாடி இருக்கின்றனர். மும்பையில் நடந்த இந்த பார்ட்டியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். மேலும், நடிகைகள் கீர்த்தி சனோன், தமன்னா, மிருனாள் தாகூர், தயாரிப்பாளர் கனிகா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேரே இஷ்க் மெய்ன்
இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களைத் தவிர்த்து தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்திலும், செல்வராகவன் இயக்கத்திலும், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இன்னும் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.