திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ
90களில் முன்னணி நடிகையாக இருந்த நாயகிகள் தற்போது திருமணம் ஆகி குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டாலும், அவ்வப்போது சந்தித்து தங்களுடைய நட்பை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் திடீர் என இவர்கள் கெட் டூ கெதர் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திரையுலகை பொறுத்தவரை எதுவுமே நிரந்தரம் இல்லை. திருமணத்திற்கு முன்பு... முன்னணி ஹீரோயினாக கொடி கட்டி பறந்தாலும், திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
அதுவும் குழந்தைகள் பிறந்து விட்டால், இரண்டாவது நாயகி வாய்ப்பு கூட கிடைக்காது. குணச்சித்திர வேடத்தில் தான் அவர்கள் நடிக்க வேண்டி இருக்கும்.
மேலும் செய்திகள்: குட்டி மகள் மற்றும் காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் ஸ்ரேயா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
ஆனால் இதையெல்லாம் கடந்து, கதையின் நாயகியாக நடித்து திரையுலகில் ஜொலிக்கும் வாய்ப்பு, ஜோதிகா போன்ற சிலருக்கே கிடைக்கிறது எனலாம்.
திருமணத்திற்கு பின்பு சில நடிகைகள் திரையுலகை விட்டு விலகியே இருந்தாலும், அவ்வப்போது திரையுலகை சேர்ந்த தங்களின் தோழிகளை சந்தித்து, நட்பை வளர்த்து கொள்ள அவர்கள் தவறியது இல்லை.
மேலும் செய்திகள்: 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!
அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாகவே, நடிகை ரம்பா குஷ்பு வீடு, சினேகா மற்றும் ப்ரீத்தா வீட்டு வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.
மேலும் சமீபத்தில் கணவரை இழந்த நடிகை மீனாவை, சங்கீதா, சங்கவி, ரம்பா ஆகியோர் சந்தித்த புகைப்படங்களையும் மீனா நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, 90'ஸ் நாயகிகளான குஷ்பு, மீனா, சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் ஒன்று கூடி கெட் டூ கெதர் பார்ட்டியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.
மேலும் செய்திகள்: பஞ்சு போன்ற மேனியை... பளீச் என காட்டி மாடர்ன் உடையில் மயக்கும் அதிதி ஷங்கர்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
இதில் பிரபல நடிகர் பிரபு தேவா மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. பிரபு தேவா ரம்பா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.