20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள, 'ஜெயிலர்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், சில நடிகர் நடிகைகளின் காம்போவை மட்டும் எக்காலத்திலும் மறக்க முடியாது. அப்படி பட்ட ஒரு காம்போ தான் படையப்பா - நீலாம்பரி. 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'படையப்பா' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவரது நடிப்பு இந்த படத்தில் மிகவும் பாராட்டபட்டது. 'படையப்பா' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் 'பாபா' படத்தில் நீலாம்பரி வேடத்திலேயே கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்த இரு படங்கள் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் பின்னர் இருவருமே ஒரு படத்தில் கூட இணைந்து நடித்தது இல்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின்னர்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'ஜெயிலர்' படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: பஞ்சு போன்ற மேனியை... பளீச் என காட்டி மாடர்ன் உடையில் மயக்கும் அதிதி ஷங்கர்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தரம்யா கிருஷ்ணன், இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. பாபா படத்தில் சிறு வேடத்தில் மட்டுமே நடித்திருந்த நிலையில்... மீண்டும் ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன் காம்போவை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதே போல் தரமணி, ராக்கி, போன்ற தரமான படங்களில் நடித்து வரும் வசந்த் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. அண்ணாத்த படத்திற்க்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற சேலையை காற்றில் பிறக்க விட்டு... 'லிகர்' பட புரோமோஷனில் பாலிவுட்டை தெறிக்க விட்ட ரம்யா கிருஷ்ணன்!