MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் - நீதிமன்றம் தடாலடி உத்தரவு

ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் - நீதிமன்றம் தடாலடி உத்தரவு

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 09 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana nayagan Censor Issue Verdict
Image Credit : X

Jana nayagan Censor Issue Verdict

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு இன்று முக்கியமான நாள். முதலில் இன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில்தான் தணிக்கை வாரியத்தின் தலையீட்டால் 'ஜனநாயகன்' படத்தின் சட்டப் போராட்டம் நீதிமன்றம் வரை சென்றது. படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் வழக்கின் பின்னணி
Image Credit : X

ஜனநாயகன் வழக்கின் பின்னணி

சான்றிதழ் தருவதாக உறுதியளித்த பிறகு ஏன் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பினீர்கள் என்று நீதிமன்றம் விசாரணையின் போது கேள்வி எழுப்பியது. குழுவில் உள்ள ஒருவரே புகார்தாரராக இருப்பது ஆரோக்கியமற்ற போக்கு என்றும் நீதிமன்றம் விமர்சித்தது. ஆனால், சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் சிபிஎஃப்சி தலைவர் தலையிடலாம் என்பது தணிக்கை வாரியத்தின் வாதமாக இருந்தது. தணிக்கை குழுவில் உள்ள ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பான்மை அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கேவிஎன் தரப்பு வாதம் முன்வைத்து இருந்தது.

Related Articles

Related image1
பொங்கல் ரேஸில் மோதும் 15 படங்கள்... அடேங்கப்பா ஜனநாயகன், பராசக்திக்கு இம்புட்டு போட்டியா?
Related image2
Jananayagan : 'எப்போ ஜனநாயகன் ரிலீஸோ அப்போதா பொங்கல்' விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுக்கும் பிரபலங்கள்
34
தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
Image Credit : X

தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளதால் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

44
உற்சாகத்தில் ரசிகர்கள்
Image Credit : X

உற்சாகத்தில் ரசிகர்கள்

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பும் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என கூறியுள்ள நீதிமன்றம், மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவையும் ரத்து செய்துள்ளது. விஜய் படத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால், ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் ரேஸில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்
Recommended image2
Parimala And Co Review : பாண்டிராஜின் ‘பரிமளா அன்ட் கோ’ டக்கரா? மக்கரா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Peddi Movie Day 1 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பெத்தி'! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
பொங்கல் ரேஸில் மோதும் 15 படங்கள்... அடேங்கப்பா ஜனநாயகன், பராசக்திக்கு இம்புட்டு போட்டியா?
Recommended image2
Jananayagan : 'எப்போ ஜனநாயகன் ரிலீஸோ அப்போதா பொங்கல்' விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுக்கும் பிரபலங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved