நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதை குறித்து ரவி மோகன், சிலம்பரசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது ஆதரவை விஜய்க்கு வழங்கியுள்ளனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்'. இந்த படம் ஜனவரி 9ம் தேதி அதாவது நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதி தள்ளி வைத்தது. இதனால் நாளை படம் ரிலீஸ் ஆகாது என்பதை படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், ஜனநாயகம் ரிலீஸ் ஒத்திப்புக்கு அரசியல் பின்னணி தான் காரணம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சில நடிகர்களும், இயக்குனர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார்? அவர்கள் கூறிய கருத்துக்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

நடிகர் ரவி மோகன்

" மனவேதனை விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்கள் பக்கத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவை இல்லை. நீங்கள் தான் தொடக்க விழா. அந்த தேதி எப்போது வந்தாலும் பொங்கல் அப்போதுதான் தொடங்கும். #standwithvijayanna".

நடிகர் சிலம்பரசன்

"அன்புள்ள விஜய் அண்ணா பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுப்பதில்லை. இதைவிட பெரிய புயல்களை கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். உண்மையான திருவிழா 'ஜனநாயகன்' வெளியாகும் நாளில் தான் தொடங்கும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ்

திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜூம் விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "இது சினிமாவுக்கு கடினமான நேரம். திரைப்பட சகோதரத்துவத்திற்குள் ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தார். சுயாதீன திரைப்படங்களை ஆதரிக்கவும், தணிக்கை காலக்கெடுப்பை ஒழுங்குபடுத்தவும், பெரிய வெளியீடுகளுக்கான தாமதங்களை தவிர்க்கவும், சினிமா கலையை பாதுகாக்க ஒன்றிணைவோம். அரசியல் ரீதியாகவும் மாறி உள்ளது. பல தலைவர்கள் அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி படத்தை தாமதப்படுத்துவதாக" குற்றம் சாட்டினார்.

மக்களவை எம்.பி விஜய் வசந்த்

"9 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி அவர்கள் தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அவமானப்படுத்துவதற்கு எதிராக அரசாங்கத்தை எச்சரித்தார். இன்று பாஜக வேண்டும் என்றே #ஜனநாயகன் தணிக்கை சான்றிதழை நிறுத்தி அதன் வெளியீட்டை தடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதித்ததால் அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகிறது" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர்

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக பிரதமருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், " அன்புள்ள பிரதமர் மோடி ஜி நடிகர் விஜய்யின் ஜனநாயகன். திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சை அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்த கவலைகளை தூண்டி உள்ளது அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்து கொள்ள தக்கவை என்றாலும் ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேலும் அரசியல் ஆதாயங்களுக்காக சினிமாக்கள் தணிக்கை செய்யப்படுவதை தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியல் சண்டைகளில் பொழுதுபோக்கு பகடைக்காயாக பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் மீதான உங்கள் அழுத்தம் காரணமாக நடிகர் விஜயின் படம் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாதது. இது தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு நேரிடும் அநியாயம். அரசியலை விலக்கி வைத்து படைப்பு சுதந்திரத்தை மதிப்போம். மோடி ஜி நடிகர் விஜய் அல்ல அரசியல்வாதி விஜய் எதிர்த்து உங்களது 56 அங்குலம் மார்பு உரிமையை நிரூபிப்போம். நினைவில் கொள்ளுங்கள் உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது. @INCTamilNadu என்று பதிவிட்டிருந்தார்.

நடிகர் ஸ்ரீமன்

"எனக்கு அரசியல் தெரியாது. அது என் கப் தேநீர் அல்ல. என் சுவாசம், என் ரொட்டி, வெண்ணெய், ஜாம். கடந்த மூன்று நாட்களில் மட்டுமே திரைப்பட ஆர்வலர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதையும் அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையும் பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் தங்களை தயார் படுத்தி கொள்கிறார்கள் என்பதை நான் காண்கிறேன் சட்டம் தான் ராஜா நாங்கள் நீதியை நம்புகிறோம்" என்று விஜய் ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

மக்களவை எம்.பி ஜோதிமணி

இதற்கிடையில் மக்களவை எம்.பி ஜோதி மணியும் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் தணிக்கை வாரியம் ஜனநாயகன்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் படத்துறையின் மீதான தாக்குதல். நமது அரசியல் சார்புகள் வெறுப்புகளுக்கு அப்பால். கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நபரும் இதை கண்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

இவர்களை தவிர வெங்கட் பிரபு, சிபி சத்யராஜ், அஜய் ஞானமுத்து ஆகியோரும் விஜய்க்கு ஆதரவாக தங்களது குரலை கொடுத்துள்ளனர்.