- Home
- Cinema
- நடனத்தில் ஜோதிகாவை பீட் பண்ணனும்.. 'சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வர வைத்த கங்கனா!
நடனத்தில் ஜோதிகாவை பீட் பண்ணனும்.. 'சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வர வைத்த கங்கனா!
'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி, கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள கங்கனா ரணாவத் இந்த படத்தின் நடன பயிற்சிக்காக, கலா மாஸ்டரை மும்பைக்கு வரவைத்து நடனம் கற்றுக்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக கலா மாஸ்டர் கங்கானாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தில் 'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, பிரபு, கே ஆர் விஜயா, நாசர், வடிவேலு, மாளவிகா, வினீத், போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 18 வருடங்களுக்கு பின் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து, ஏற்கனவே கங்கனா பேட்டி ஒன்றில் கூறிய போது ஜோதிகா அளவிற்கு தன்னால் நடிக்க முடியாது என ஓப்பனாக கூறியது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. எனினும் ஜோதிகாவுக்கு நிகரான நடிப்பையும், நடனத்தையும், வெளிப்படுத்த வேண்டும் என்பதால் பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டரை மும்பைக்கு வரவழைத்து இப்படத்தில் இடம்பெறும் நடனத்தை கங்கனா கற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக, இன்று பாந்த்ராவில் கலா மாஸ்டர் உடன் கங்கனா நடந்து செல்லும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தலைவி படத்திற்காக தன்னால் முடிந்தவரை கடின உழைப்பை செலுத்திய கங்கனா, இந்த படத்திற்கும் அதிக உழைப்பை செலுத்தி வருகிறார். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஸ்ரேயா சரண் முன்னழகை ரசித்து வர்ணித்த ரசிகர்..! எதிர்பாராத வார்த்தையை கூறி ஷாக் கொடுத்த கணவர்!