ஸ்ரேயா சரண் முன்னழகை ரசித்து வர்ணித்த ரசிகர்..! எதிர்பாராத வார்த்தையை கூறி ஷாக் கொடுத்த கணவர்!
திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும், திரையுலகில் ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரேயாவின் முன்னழகை ரசிகர் ஒருவர் வர்ணிக்க, இதற்கு எதிர்பாராத பதில் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் அவரின் கணவர் ஆண்ட்ரூ.
உத்திர பிரதேசத்தை சேர்ந்த அழகு தேவதையான நடிகை ஸ்ரேயா சரண், தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கடந்த 2001 ஆம் ஆண்டு, 'இஷ்டம்' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் நடிக்க துவனகினார்.
குறிப்பாக தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' என்கிற திரைப்படம் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. முதல் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ரேயா, பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'மழை' படத்தில் தாவணி கட்டிய கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்கள் மனதை அலைபாய வைத்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி, விஷாலுக்கு ஜோடியாக தோரணை, ஜீவாவுக்கு ஜோடியாக ரௌத்திரம், விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.
முப்பது வயதை கடந்த நடிகைகள் பட்டியலில் இணைந்த பின்னர், ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. மேலும் இவர் நடித்த படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், ரகசியமாக தன்னுடைய நீண்ட நாள் காதலரும், ரஷ்ய நாட்டு கிரிக்கெட் வீரருமான ஆண்ட்ரூ கோசீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, கொரோனா லாக் டவுன் நேரத்தில் கர்ப்பமான நிலையில், குழந்தையையும் பெற்றெடுத்தார். ஆனால் சுமார் 1 வருடம் வரை குழந்தை பிறந்த தகவலை தெரிவிக்காமல் இருந்த ஸ்ரேயா பின்னர் இது குறித்து அறிவித்தார். திருமணம் ஆகி குழந்தை பெற்றெடுகொண்ட போதிலும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலமாவார்.
அவ்வப்போது ரசிகர்களை கிளுகிளுப்பேற்றும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதோடு, நேரம் கிடைக்கும்போதெல்லாம்... ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவார். அது போல் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரேயா ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் அவரின் முன்னழகை ரசித்து ரசித்து வர்ணித்துள்ளார்.
வேறு வழியே இல்லாமல்... 'ராஜா ராணி 2' சீரியல் உள்ளே வந்த ஆஷா கவுடா! ரியாவை வெளியேற்ற காரணம் இது தான்!
அப்போது அருகில் இருந்த ஸ்ரேயாவின் கணவர், ஆண்ட்ரூ எதிர்பாராத விதமாக உங்களுடைய கருத்துக்கு நான் உடன்படுகிறேன் எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார். பொதுவாக நடிகைகளை பற்றி மிகவும் ஹார்ட்டாக ரசிகர்கள் வர்ணிக்கும் போது அவருடைய குடும்பத்தினர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பது வழக்கமாக இருக்கும் நிலையில், ஸ்ரேயாவின் கணவரின் பதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.