இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!
40 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் சிம்புவுக்கு, தற்போது திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, பன்முக திறமையாளராக விளங்கும் டி.ராஜேந்திரனின் மூத்த மகன் ஆவார். இவரின் இளைய மகன் குறளரசன மற்றும் மகள் இலக்கியாவுக்கு திருமணம் முடிந்து விட்ட போதிலும், தற்போது வரை சிம்புவுக்கு திருமணம் கைகூட வில்லை. இந்நிலையில் தற்போது சிம்புவுக்கு பெண் கிடைத்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வருடங்களாக எடை கூடி காணப்பட்ட சிம்பு, இதன் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்ததாக கூறப்பட்டது. எனவே தற்போது தீவிர உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் பிட்டாக மாற்றிய பின்னர், சிம்புவின் திரைப்பட வாழ்க்கையும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
வேறு வழியே இல்லாமல்... 'ராஜா ராணி 2' சீரியல் உள்ளே வந்த ஆஷா கவுடா! ரியாவை வெளியேற்ற காரணம் இது தான்!
அதே போல் விரைவில் சிம்பு நடித்து முடித்துள்ள 'பத்து தல' படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சிம்பு சிம்பு கேங்ஸ்டாராக நடித்துள்ளார். இது கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முஃட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.
ஹன்சம் ஹீரோ என பெயர எடுத்த நடிகர் சிம்பு சில பல காதல் தோல்விகளை கடந்து வந்துள்ள நிலையில், தற்போது 40 வயதில் எட்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இவருக்கு பல வருடங்களாகவே இவருடைய பெற்றோர் பெண் தேடி வரும் நிலையில், மகனுக்கு பிடித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மயில்சாமி இறந்தபோது என்ன நடந்தது இது தான்..! தவறான தகவல்களால் வேதனையோடு பேசிய மகன்..!
மேலும் ஏற்கனவே சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது சிம்பு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. திருமணம் குறித்து வந்தந்தி வரும் போதெல்லாம் அதற்க்கு, சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் கொடுப்பதும் நிலையில், இந்த முறையாவது... இந்த தகவல் உண்மை என்று சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.