MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிசுகிசு
  • ஸ்ரீதேவி இறந்தாலும் மக்கள் மனதில் இருந்து நீங்காத மயிலு ! தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் ஒரு பார்வை!

ஸ்ரீதேவி இறந்தாலும் மக்கள் மனதில் இருந்து நீங்காத மயிலு ! தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் ஒரு பார்வை!

50 வயதைக் கடந்தாலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு அழகிலும், ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ரீதேவி இந்த மண்ணுலகை விட்டு, விண்ணுலகம் சென்ற தினம் இன்று! இந்த நாளில், இவர் தமிழில் நடித்து வெளியாகி தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் சிறந்த படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 24 2023, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

தமிழ் சினிமாவில் 1969 ஆம் ஆண்டு வெளியான 'துணைவன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழ் திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாகவும் மாறியவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் தன்னுடைய கதாநாயகி பயணத்தை துவங்கிய ஸ்ரீதேவிக்கு, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்த '16 வயதினிலே' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

சில படங்களில் நடிக்கும் போது அதில் வரும் கதாபாத்திரங்கள் அவர்களின் அடையாளமாக மாறிவிடுவது போல் '16 வயதினிலே' படத்தில் நடித்த மயிலு கதாபாத்திரத்தையும் இன்றுவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

முடிவுக்கு வருகிறதா இரண்டு விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்கள்..?
 

310

அடுத்தடுத்து ரஜினி, கமல், ஆகிய இருவருடன் மட்டுமே பல படங்களில் நடித்துள்ள  ஸ்ரீதேவி கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையை பெற்றவர்.  தமிழில் இவர் நடிப்பில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்கள் குறித்து இந்த  தொகுப்பில் பார்ப்போம்.
 

410

தன்னுடைய 13 வயதில் ஸ்ரீதேவி இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான மூன்று முடிச்சு திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினி - கமல் என இருவருடனும் இணைந்து நடித்திருந்தார். 

ஸ்ரேயா சரண் முன்னழகை ரசித்து வர்ணித்த ரசிகர்..! எதிர்பாராத வார்த்தையை கூறி ஷாக் கொடுத்த கணவர்!
 

510

இதையடுத்து  வெளியான திரைப்படம் '16 வயதினிலே' இந்த படத்தில், ஸ்ரீ தேவி மயிலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது வரை, மயிலு என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரமாக உள்ளது. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை, இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார். இப்படத்திலும் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

610

அதுபோல் ஸ்ரீதேவி மற்றும் கமலஹாசன் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் மட்டும் அல்ல அதில் இடம்பெறும் பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக  'கண்ணீர் கலைமானே' பாடல் இன்றுவரை பல ரசிகர்களின் காலர் டியூனாக உள்ளது. 

திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி சிறுகதை'!
 

710

தொடர்ந்து கமலஹாசன் உடன் நடித்த மீண்டும் கோகிலா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாக மட்டும் இன்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 80-களில் ஸ்ரீதேவி - கமல் காம்பினேஷன் தொடர்ந்து ஹிட் அடித்ததால், கிசு கிசுக்களும் வலம்வந்து.
 

810
sridevi hit movie

sridevi hit movie

கமலை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீ தேவி நடித்த படங்களும் தொடர்ந்து வெற்றி படங்களாகவே அமைந்தது. அந்த வங்கியில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்த காயத்ரி, ஜானி போன்ற படங்களும் 100 திரையரங்குகளில் பல வாரங்கள் ஓடி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகும்.

இரண்டு தோல்வி படங்களுக்கு பின்... மீண்டும் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..!
 

910
sridevi hit movie

sridevi hit movie

பாலிவுட் திரையுலகின் உள்ளே நுழைந்த பின்னர் தென்னிந்திய திரைப்படங்கள் நடிப்பதை தவிர்த்த நடிகை ஸ்ரீதேவி, பிரபல  தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, மும்பையிலேயே செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் தமிழ் - ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் ரீ-என்ட்ரிகொடுத்தார் . இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து சில படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.
 

1010

கடந்த 2018 ஆம் ஆண்டு, தன்னுடைய உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி  அங்கு குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இவர் இறந்து 5 வருடங்கள் ஆனாலும், தற்போது வரை இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரீதேவி.

இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஸ்ரீதேவி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
Recommended image2
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை
Recommended image3
திருமணத்திற்குப் பின் 3 ஹீரோயின்களுடன் கள்ளக்காதல்; மாமாக்குட்டியாக வலம் வந்த ஹீரோ யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved