ஒரே நாளில் ரிலீசாகும் கமல்ஹாசனின் 2 பிரம்மாண்ட படங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!
கமல்ஹாசன் நடித்துள்ள இந்திய 2 படத்துக்கு போட்டியாக அவர் நடித்துள்ள மற்றுமொரு பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
kamalhaasan
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் விறுவிறுவென தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Indian 2
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு கமல்ஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரு மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்கும் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை ஆரம்பிக்க உள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘வாடி என் கரீனா சோப்ரா’னு கார்த்தி சொல்ல... ‘வந்தியத்தேவன் மாமா’னு ஓடோடி வந்த சந்தானம் - வைரலாகும் போட்டோ
kamalhaasan, Prabhas
இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதன்படி பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசனும் வில்லனாக நடிக்க உள்ளார். இப்படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், இது இந்தியன் 2 படத்துடன் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
Project K
புராஜெக்ட் கே படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கியவர் ஆவார். புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இப்போ அவர் என்கூட இல்ல... நாங்க பிரிஞ்சிட்டோம்! நடிகை ராஷ்மிகா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை