‘வாடி என் கரீனா சோப்ரா’னு கார்த்தி சொல்ல... ‘வந்தியத்தேவன் மாமா’னு ஓடோடி வந்த சந்தானம் - வைரலாகும் போட்டோ
நடிகர் கார்த்தியும், நடிகர் சந்தானமும் சமூக வலைதளத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா பட புகைப்படத்தை பதிவிட்டு உரையாடிக்கொண்டது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
karthi, santhanam
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது நாயகனாக மட்டும் நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த படங்களில் ஒரு சில தவிர பெரும்பாலானவை பிளாப் ஆகின. இதனால் மீண்டும் காமெடி ரூட்டுக்கே திரும்பி விடலாமா என்கிற ஐடியாவில் இருந்த சந்தானம், அஜித்தின் ஏகே 62 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் அப்படம் டேக் ஆஃப் ஆகாமல் அப்படியே ட்ராப் செய்யப்பட்டது.
karthi, santhanam
இந்நிலையில், நடிகர் சந்தானமும், நடிகர் கார்த்தியும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. நடிகர் கார்த்தியும் சந்தானமும் இதுவரை சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், மேற்கண்ட பங்களில் இவர்கள் இருவரும் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
இதையும் படியுங்கள்... இப்போ அவர் என்கூட இல்ல... நாங்க பிரிஞ்சிட்டோம்! நடிகை ராஷ்மிகா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
karthi, santhanam
அந்த வகையில் கார்த்தியும், சந்தானமும் ராஜேஷ் இயக்கத்தில் இணைந்து நடித்த திரைப்படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. இப்படம் பிளாப் ஆனாலும் இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. குறிப்பாக இதில் சந்தானம் கரீனா சோப்ரா என்கிற கெட் அப்பில் நடித்திருப்பார். சந்தானத்திற்கு அந்த லேடி கெட் அப் கச்சிதமாக பொருந்தியும் இருக்கும். அந்த கெட் அப்பில் அவர் சொல்லும் சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி என்கிற டயலாக் ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனது.
karthi, santhanam
இந்நிலையில், கரீனா சோப்ரா கெட் அப்பில் இருக்கும் சந்தானத்தை கட்டியணைத்தவாரு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நடிகர் கார்த்தி, வாடி என் கரீனா சோப்ரா என கேப்ஷனும் கொடுத்திருந்தார். இந்த போட்டோ வைரல் ஆனதும், நடிகர் சந்தானம் ‘வந்துட்டேன் வந்தியத்தேவன் மாமா’ என ரிப்ளை கொடுத்துள்ளார். அவர்கள் இடையேயான இந்த ஜாலியான உரையாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என அவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அஜித் பட பாடலை ஆட்டைய போட்டாரா அனிருத்?.... காப்பி சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் லியோ பட பாடல்