இப்போ அவர் என்கூட இல்ல... நாங்க பிரிஞ்சிட்டோம்! நடிகை ராஷ்மிகா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடிகை ராஷ்மிகா, நீண்ட காலமாக தன்னுடன் பணியாற்றி வந்த மேனஜரை நீக்கிவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
Rashmika Mandanna
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக இந்தியில் நடிகை ராஷ்மிகா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
Image: Instagram
இதுதவிர தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இப்பட ஷூட்டிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு அடுத்ததாக மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சமீபத்தில் மகேஷ் பாபு படத்தில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியதை அடுத்து, அப்படத்தில் அவருக்கு பதிலாக ராஷ்மிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... அஜித் பட பாடலை ஆட்டைய போட்டாரா அனிருத்?.... காப்பி சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் லியோ பட பாடல்
இப்படி பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா, அண்மையில் தனது மேனேஜரை வேலையை விட்டு தூக்கினார். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பணியாற்றி வந்த அந்த மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்ததன் காரணமாக தான் ராஷ்மிகா அவரை வேலையை விட்டு தூக்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
rashmika
அதன்படி, தங்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த பிரிவு சுமூகமானது தான். நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்து உள்ளோம். எங்கள் பிரிவை பற்றி பரவும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷ்மிகா. மேனேஜர் உடனான பிரிவு குறித்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தங்கை ஷாமிலியுடன் செலபிரேஷன் மோடில் அஜித்தின் ஆசை மனைவி ஷாலினி! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!