MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்போ கேப்டன்... இப்போ தளபதியா? திமுக மேடையில் விஜய்யை அட்டாக் செய்து பேசிய வடிவேலு..!

அப்போ கேப்டன்... இப்போ தளபதியா? திமுக மேடையில் விஜய்யை அட்டாக் செய்து பேசிய வடிவேலு..!

நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vadivelu Slams Vijay
Image Credit : X

Vadivelu Slams Vijay

சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு, அரசியல் மேடையிலும் தன்னுடைய கருத்துகளைத் தாராளமாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, அவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்தது பேசியது கவனம் பெற்றுள்ளது.

வடிவேலு பல ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். அந்தக் கட்சியுடன் அவருக்கு நீண்ட காலமாக ஒரு நெருக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்தபோது உதயநிதி ஸ்டாலினுடன் ஏற்பட்ட தொடர்பும் அவரின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியதாக பேசப்படுகிறது. இதற்கு முன்பும் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்தை எதிர்த்து திமுக மேடையில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

24
வடிவேலு பேசியதென்ன?
Image Credit : X

வடிவேலு பேசியதென்ன?

இந்நிலையில் சமீபத்திய திமுக நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார். “முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஒரு முக்கிய முடிவை எடுத்தார். மக்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.5000 வழங்கப்பட்டதை கேட்டதும், திமுக ஆட்சி அழிய வேண்டும் என கூறுபவர்கள் கூட அதிர்ச்சி அடைந்திருக்கலாம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் ஏன் சிலர் தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள் என்று புரியவில்லை” என அவர் கூறினார்.

மேலும், திமுக அரசு இன்னும் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வரப்போகிறது என்றும் வடிவேலு தெரிவித்தார். “ஸ்டாலினை சாதாரண தலைவராக நினைக்கக்கூடாது. பேசுவது மேடையில் எவராலும் செய்யலாம். ஆனால் செயல்படுவது திமுக அரசுதான். இந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்; தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி ஆகிவிடும்” என்று அவர் கூறினார்.

Related Articles

Related image1
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!
Related image2
வடிவேலு காமெடியால் நடந்த மெடிக்கல் மிராக்கிள்... கோமாவில் இருந்த சிறுமி மீண்டெழுந்த அதிசயம்..!
34
விஜய்யை தாக்கி பேசிய வடிவேலு
Image Credit : our own

விஜய்யை தாக்கி பேசிய வடிவேலு

அதேபோல், தமிழ்நாட்டில் திமுக தான் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசியல் சக்தி என்றும் அவர் தெரிவித்தார். “எந்த சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் ஸ்டாலின் மட்டுமே. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு கிடைப்பதற்கு காரணம் இந்த அரசு தான். எதுக்கெடுத்தாலும் திமுகவை அழிக்கணும்னு சொல்றாங்க. டேய் சொன்னவனை ஃபுல்லா ஆளைக் காணோம். எங்க இருக்காங்கனு தெரியல. அதைப்பற்றி பேசுனா சிக்கலாகிடும். நான் டீப்பா போக விரும்பல” என அவர் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசி உள்ளார்.

44
அடுத்ததும் திமுக ஆட்சி தான்
Image Credit : our own

அடுத்ததும் திமுக ஆட்சி தான்

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்ட அவர், “அடுத்த தேர்தலிலும் திமுக பெரிய வெற்றி பெறும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது எங்கள் இலக்கு. மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். ஆனால் அதற்காக நாம் சும்மா இருக்கக்கூடாது; தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். திமுக என்றாலே உழைப்பு தான் அடையாளம்” என்று உரையாற்றினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகிபாபுவின் கெணத்த காணோம் படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
பாட்டியின் பிளானை கேட்டு அரண்டுபோன அரசி... கடும் அப்செட்டில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பூஜையால் வெடிக்கப்போகும் பூகம்பம்... குணசேகரன் நல்லவர் வேஷம் போட்டது இதுக்குத்தானா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!
Recommended image2
வடிவேலு காமெடியால் நடந்த மெடிக்கல் மிராக்கிள்... கோமாவில் இருந்த சிறுமி மீண்டெழுந்த அதிசயம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved