MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Ramayana Movie Review: ராமாயணா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

Ramayana Movie Review: ராமாயணா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

Ramayana Part 1 Movie Review : ராமாயணம் இதிகாசத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'ராமாயணா'. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடித்துள்ள இந்தப் படம் எப்படி இருக்கு? வாங்க விமர்சனத்துல பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Nov 05 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ramayana Part 1 Movie Review
Image Credit : Asianet News

Ramayana Part 1 Movie Review

ராமாயணத்தை மையமாக வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருக்கு. பிரபாஸ் நடிச்ச 'ஆதிபுருஷ்' பெரிய பிளாப் ஆச்சு. இப்போ பாலிவுட்ல நிதேஷ் திவாரி இயக்கத்துல 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' உருவாகியிருக்கு. ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிச்சிருக்காங்க. பெரிய பட்ஜெட்ல உருவான இந்தப் படம் வியாழக்கிழமை (நவம்பர் 5) உலகமெங்கும் ரிலீஸ் ஆகியிருக்கு. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ராமாயணா படத்தின் கதை
Image Credit : Asianet News

ராமாயணா படத்தின் கதை

வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் போர்ல தேவர்கள் ஜெயிக்கிறாங்க. விஷ்ணு தேவர்கள் பக்கம் இருப்பதை அசுரர்களால் ஏத்துக்க முடியல. அவரை அழிக்க லங்கை அசுரர்கள் முடிவு பண்றாங்க. ராவணனின் (யாஷ்) அம்மா சோபனா அவனை தயார்படுத்துறாங்க. பிரம்மாவிடம் வரம் வாங்கி லங்கைக்கு அரசனாகிறான் ராவணன். அவனை அழிக்க விஷ்ணு ராமனாக பிறக்கிறார். விஸ்வாமித்திரர் யாகம், சீதை (சாய் பல்லவி) சுயம்வரம், கைகேயி கேட்ட வரத்தால் 14 வருடம் வனவாசம், சூர்ப்பனகை மூக்கறுப்பு, சீதையை ராவணன் கடத்துவது வரை முதல் பாகத்துல காட்டியிருக்காங்க.

36
ராமாயணா படம் ஓர் அலசல்
Image Credit : Asianet News

ராமாயணா படம் ஓர் அலசல்

ராமாயணா கதை நமக்கு நல்லாவே தெரியும். ஆனா அதை எப்படி காட்டியிருக்காங்க என்பதுதான் முக்கியம். விஷுவல் ட்ரீட்டாக படத்தை கொடுத்திருக்காங்க. VFX ரொம்பவே சூப்பரா இருக்கு. ராவணன் பார்வையில் கதையை சொல்வது புதுசா இருக்கு. முதல் அரை மணி நேரம் ராவணன் பக்கம் தான் கதை நகருது. அப்புறம் ராமன் பக்கம் திரும்புது. ராமர் ரொம்ப நல்லவர்னு விஸ்வாமித்திரரும் மற்றவர்களும் திரும்பத் திரும்ப சொல்றது கொஞ்சம் செயற்கையா இருக்கு. சீதை சுயம்வரம் எதிர்பார்த்தபடியே இருக்கு. தசரதன், கைகேயி, ராமன் இடையிலான காட்சிகள் எமோஷனலாக கனெக்ட் ஆகுது. ஜடாயு - ராவணன் சண்டை, சூர்ப்பனகை கணவனுடன் ராவணன் போடும் சண்டை புதுசா இருக்கு.

46
ராமாயணா படத்தில் உள்ள குறைகள்
Image Credit : Asianet News

ராமாயணா படத்தில் உள்ள குறைகள்

கதை முன்பே தெரிந்ததுதான் என்றாலும், ராமரை ரொம்பவே உயர்த்தி காட்டுவது கொஞ்சம் போர் அடிக்குது. ராமன் - சீதை இடையிலான காதல் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ராவணனை அழிப்பதுதான் தன் லட்சியம் என ராமர் நினைப்பதும், விஷ்ணுதான் ராமனாக பிறந்தார் என்பதை அடிக்கடி சொல்வதும் சஸ்பென்ஸை குறைக்குது. படம் ரொம்ப நீளமாக இருக்கு. இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்பதற்காக கதையை ரொம்ப இழுத்திருக்காங்க. பரசுராமர் - ராமர் சந்திப்பு பெரிய அளவில் மாஸ் காட்டவில்லை. இப்படி பல இடங்களில் எலிவேட் ஆக வேண்டிய காட்சிகள் ரொம்பவே சுமாராக இருக்கு.

56
ராமாயணா விமர்சனம்
Image Credit : Asianet News

ராமாயணா விமர்சனம்

ராமர் கேரக்டர்ல ரன்பீர் கபூர் சூப்பரா நடிச்சிருக்கார். லுக், உடல்மொழி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கார். ஆனா டப்பிங் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம். ராவணனாக யாஷ் மிரட்டியிருக்கார். கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கார். சீதையாக சாய் பல்லவி ரொம்பவே செட்டில்டாக நடிச்சு அசத்தியிருக்கார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், அவர் கணவராக விவேக் ஓபராய், லட்சுமணனாக ரவி துபே நல்லா நடிச்சிருக்காங்க. ராவணனின் அம்மா கைகேசியாக சோபனா ஈர்க்கிறார். மண்டோதரியாக காஜல் வந்தாலும் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

66
ராமாயணா படம் எப்படி இருக்கு?
Image Credit : Asianet News

ராமாயணா படம் எப்படி இருக்கு?

நிதேஷ் திவாரி படத்தை நல்லாவே இயக்கியிருக்கார். ஆனா எமோஷனல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீதர் ராகவன், நிதேஷ் திவாரி ரைட்டிங் நல்லா இருக்கு. நிதேஷ் திவாரி, ஸ்ரேயாஸ் ஜெயின் வசனங்கள் ஈர்க்குது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசை பெரிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் சூப்பரா இருக்கு. பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே கேமரா ஒர்க் படத்துக்கு உயிர் கொடுக்குது. VFX வேற லெவல். ஹுசுஃபா லோகண்ட்வாலா எடிட்டிங் பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் கட் பண்ணியிருக்கலாம்.

ராமாயணா நமக்கு தெரிஞ்ச கதைதான். அதை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்றாங்க என்பதுதான் முக்கியம். விஷுவல் பிரம்மாண்டத்துல அதிக கவனம் செலுத்தியிருக்காங்க. சில புது விஷயங்களை சேர்த்து பிரெஷ்ஷான ஃபீல் கொடுத்திருக்காங்க. ஆனா எமோஷன்ஸ், டிராமா, சஸ்பென்ஸ் விஷயங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஓவர் ஆலா பார்க்கும்போது படம் ஒரு நல்ல விஷுவல் ட்ரீட் கொடுக்குது. கண்டிப்பா ஒரு முறை தியேட்டர்ல பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்
யாஷ்
சாய் பல்லவி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Recommended image2
ராமாயணா பார்ட் 1 படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமா? நயன்தாரா, ராஷ்மிகா ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved