Ponniyin Selvan Collection: தமிழில் 'பொன்னியின் செல்வன்' செய்த மாஸ் சாதனை.! வசூலில் '2.ஓ'வை தட்டி தூக்குமா.?
பொன்னியின் செல்வன் திரைப்படம் 'விக்ரம்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள நிலையில், தற்போது முதல் இடத்தில் உள்ள ரஜினிகாந்தின் 2.ஓ சாதனையை முறியடிக்குமா என்கிற எதிர்பார்த்து எழுந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா தூளிபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில், சுமார் இரண்டு வருட படப்பிடிப்புக்கு பின்னர் வெளியான, இந்த திரைப்படம் தமிழகத்தை ஆண்ட, சோழ மன்னர்களைப் பற்றிய கதை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து உலக அளவில் அதிகமாகவே இருந்தது.
இந்த திரைப்படம் வெளியானது முதலே ஒரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளியாண்டுகளில் இந்த படத்திற்கான வரவேற்பும் வசூலும் அதிகமாகவே இருந்தது.
மேலும் செய்திகள்: Varisu Movie: தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..! கசிந்தது ஸ்வீட் தகவல்..!
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி 17 நாட்களே ஆகும் நிலையில், இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடித்த திரைப்படமான 'விக்ரம்' திரைப்படம் ஒட்டுமொத்தமாக 446 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து தற்போது வரை 450 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது பொன்னியின் செல்வன்.
மேலும் செய்திகள்: சுட்டி மகன்... குட்டி மகளுடன் சமீரா ரெட்டி கொடுத்த கியூட் போஸ்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத போட்டோஸ்!
அதிக பட்சமாக 800 கோடி வசூல் செய்து, முதல் இடத்தில் உள்ள 2.ஓ திரைப்படத்தின் வசூலை தற்போது டார்கெட் செய்துள்ள 'பொன்னியின் செல்வன்' இந்த சாதனையை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதே நேரத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்கள் வெளியாக உள்ளதால் 2.ஓ வசூலை நெருங்குவது சற்று கடினமான விஷயம் என்றாலும், 500 கோடி வசூலை அசால்டாக நெருங்கி விடும் பொன்னியின் செல்வன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா