சுட்டி மகன்... குட்டி மகளுடன் சமீரா ரெட்டி கொடுத்த கியூட் போஸ்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத போட்டோஸ்!
நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய செல்ல குழந்தைகளுடன் எடுத்துக்கொண்டுள்ள கியூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழில் மென்மையான காதல் படங்களை இயக்கி பல வெற்றிகளை கொடுத்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி.
முதல் படத்திலேயே இவருடைய அழகும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ போன்ற படங்களில் படங்களில் நடித்தார். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: திருமண கோலத்தில் கழுத்தில் தாலியோடு குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும்... திடீர் என கடந்த 2014ம் ஆண்டு, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின்பு, ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகிய சமீரா ரெட்டி... இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய வாழ்க்கையை என்ஜோய் செய்து வருகிறார். மேலும் திரையுலகை விட்டு ஒதுங்கினாலும், சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா
நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படம், பீச் பிகினி என தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை குடும்பத்தோடு எடுத்து பதிவிட்டு... பரபரப்பை ஏற்படுத்தும் சமீரா, தற்போது தன்னுடைய சுட்டி மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் இந்த கியூட் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.