Varisu Movie: தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..! கசிந்தது ஸ்வீட் தகவல்..!

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

varisu first single released in diwali news trending in twitter

தளபதி விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

varisu first single released in diwali news trending in twitter

மேலும் செய்திகள்: சுட்டி மகன்... குட்டி மகளுடன் சமீரா ரெட்டி கொடுத்த கியூட் போஸ்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத போட்டோஸ்!
 

இந்த ஆண்டு தீபாவளிக்கு தளபதியின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், பொங்கலுக்கு 'வாரிசு' படத்தை வெறித்தனமாக வரவேற்க காத்திருக்கின்றனர். மேலும் தற்போது கசிந்துள்ள தகவலின் படி, வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது விஜயின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இதுவரை, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும்.. 'வாரிசு' படத்தின் இசையமைப்பாளர் போட்டுள்ள போஸ்டை பார்த்து தான் இப்படி ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

varisu first single released in diwali news trending in twitter

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா
 

இதில் வெளிப்படையாக தமன் கூறவில்லை என்றாலும், சூசகமாக கூறியுள்ளார். எனினும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு  தீபாவளியின் நெருக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக விஜய்யின் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதால், வாரிசு படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக தளபதியின் ரசிகர்கள் தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios