MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ஜனநாயகன்... இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் ஒரு பார்வை

Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ஜனநாயகன்... இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் ஒரு பார்வை

This Week Theatre and OTT Releases : நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த வாரம் ரிலீஸ் ஆவதால் அதற்கு போட்டியாக தியேட்டரில் எந்த படமும் வெளிவரவில்லை. இருப்பினும் ஓடிடியில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 20 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
This Week Theatre Release Movie
Image Credit : X

This Week Theatre Release Movie

ஜூலை 23ந் தேதி ஏராளமான படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருந்தன. ஆனால் கடந்த வாரம் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து படங்களுமே ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துவிட்டன. ஜனநாயகன், விஜய்யின் கடைசி படம் என்பதால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் அதனுடன் எந்த படமும் போட்டி போடவில்லை. சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ஜனநாயகன் திரைப்படம் வசூலில் என்னென்ன சாதனைகள் படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

முசாஃபிர் கஃபே (Musafir Cafe)

ஜூலை 24 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'முசாஃபிர் கஃபே' ஹிந்தி வெப் சீரிஸ், ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மஹிமா மக்வானா நடித்துள்ள இந்த தொடரில், அமைதியான வாழ்க்கை வாழும் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைந்த பிறகு ஏற்படும் உறவு சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான மாற்றங்களே கதையாக சொல்லப்படுகிறது.

ரான்சம் கேன்யன் – சீசன் 2 (Ransom Canyon Season 2)

ஜூலை 23 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் 'ரான்சம் கேன்யன்' சீசன் 2, டெக்சாஸில் வாழும் மூன்று பண்ணை குடும்பங்களின் அரசியல், குடும்ப உறவுகள் மற்றும் அதிகார மோதல்களை மையமாகக் கொண்ட ஹாலிவுட் டிராமா. இந்த புதிய சீசனில் மேலும் பல எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன.

72 ஹவர்ஸ் (72 Hours)

ஜூலை 24 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகும் '72 ஹவர்ஸ்' திரைப்படத்தில், கெவின் ஹார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையை காப்பாற்ற முயலும் நடுத்தர வயது அதிகாரி ஒருவர், இளைஞர்களுடன் மூன்று நாள் பேச்சிலர் பார்ட்டியில் கலந்து கொள்ளும் சூழ்நிலையை நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

தி டெட் கலெக்டர் (The Debt Collector)

ஜூலை 23 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தி டெட் கலெக்டர்' தாய்லாந்து ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் கடன் வசூலிப்பாளர் ஒருவர் பழிவாங்க மீண்டும் குற்ற உலகில் களமிறங்கும் கதையைச் சொல்கிறது.

Related Articles

Related image1
Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது... 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
Related image2
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
34
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Image Credit : Asianet News

ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

எலைட் ஃபோர்ஸ் (Elite Force)

ஜூலை 22 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகும் 'எலைட் ஃபோர்ஸ்' பிரெஞ்சு ஆக்‌ஷன் சீரிஸில், தனது படைப்பிரிவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க ஆபத்தான மிஷனில் ஈடுபடும் அதிகாரியின் பயணம் இடம்பெறுகிறது.

எ டாக்ஸிக் லவ் ஸ்டோரி (A Toxic Love Story)

ஜூலை 22 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகும் 'எ டாக்ஸிக் லவ் ஸ்டோரி' உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கிரைம் டாக்குமெண்டரி. புதிதாக திருமணமான தம்பதியர் ஒருவர் ஸ்டாக்கிங் வழக்கில் சிக்கிய சம்பவத்தை விரிவாக பதிவு செய்கிறது.

ஆதர்ஷ் பால் வித்யாலயா (Adarsh Baal Vidyalaya)

ஜூலை 24 முதல் பிரைம் வீடியோ-வில் வெளியாகும் 'ஆதர்ஷ் பால் வித்யாலயா' ஹிந்தி டிராமாவில், அரசுப் பள்ளியின் கல்வி முறையை மாற்ற முயற்சிக்கும் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் கதையாக அமைந்துள்ளன.

44
ஓடிடி ரிலீஸ்
Image Credit : Asianet News

ஓடிடி ரிலீஸ்

ஸ்டூவர்ட் ஃபெயில்ஸ் டு சேவ் தி யுனிவர்ஸ் (Stuart Fails to Save the Universe)

ஜூலை 24 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் 'ஸ்டூவர்ட் ஃபெயில்ஸ் டு சேவ் தி யுனிவர்ஸ்', 'தி பிக் பேங் தியரி' ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்பின்-ஆஃப் சீரிஸ். தவறுதலாக மல்டிவர்ஸ் நெருக்கடியை உருவாக்கும் ஸ்டூவர்ட் அதை சரிசெய்ய முயல்வதே இதன் கதை.

ப்ளீச்: தவுசண்ட்-இயர் பிளட் வார் – இறுதி சீசன் (Bleach: Thousand-Year Blood War – Final Season)

ஜூலை 25 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'Bleach: Thousand-Year Blood War – Final Season', உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள இந்த பிரபல அனிமே தொடரின் இறுதி சீசனாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு கதையின் நிறைவை வழங்குகிறது.

பள்ளிச்சட்டாம்பி (Pallichattambi)

ஜூலை 24 முதல் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் 'பள்ளிச்சட்டாம்பி' மலையாள திரைப்படத்தில், டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1950-களின் கேரள அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை பின்னணியாகக் கொண்டு, ஒரு இளைஞனின் சிந்தனை மாற்றத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
ஜன நாயகன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : செம டோஸ் கொடுத்த விஜயா.... டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டாரா ரோகிணி?
Recommended image2
72nd National Film Awards: 2 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய தனுஷ்..
Recommended image3
OTT : காதலும்... துரோகமும்; ஓடிடியில் சக்கைப்போடு போடும் மலையாள த்ரில்லர் படம் - கதை என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது... 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
Recommended image2
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved