இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது - ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்
இசையமைப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை மட்டமான மனிதர் என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பசங்க, ஈசன் போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சி வேறலெவல் வரவேற்பை பெற்றது. சமீப காலமாக இவர் சமூக வலைதளங்களில் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இளையராஜாவை மட்டமான மனிதர் என விமர்சித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது : “இசையமைப்பாளர் இளையராஜா தான் என்னுடைய குரு. அவருடைய பாடல்களைக் கேட்டு தான் இசையை கற்றுக்கொண்டேன். இன்னைக்கு என்னுடைய அடையாளம், அங்கீகாரம், எனக்கு கிடைத்த வெற்றி எல்லாமே அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட இசையால் தான்.
இளையராஜா என்கிற தனிமனிதன் மேல் எனக்கு காட்டமான விமர்சனம் உள்ளது. இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் பெரிய இசையமைப்பாளர், அவருக்கு இசைஞானினு பட்டம் கொடுத்திருக்காங்க. அதுக்கெல்லாம் அவர் முழு தகுதியானவர். இளையராஜா என்கிற இசையமைப்பாளரைப் பற்றியும் அவர்களது பாடல்களைப் பற்றியும் என்னால் மணிக்கணக்கில் பெருமையாக பேச முடியும். ஆனால் ஒரு மனிதனா அவர் ரொம்ப மட்டமானவர்.
இதையும் படியுங்கள்... 2-வது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா விஷ்ணு விஷால்..? லால் சலாம் நாயகனின் டுவிட்டால் குழம்பிபோன ரசிகர்கள்
ஒரு சாதாரண ஆளா அவர் இருந்தாகூட இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறையில் அவரை சாமினு கூப்பிடுவாங்க. அவருக்கு சாமியார்னு பெயர் உண்டு. ரஜினி சாரே அவரை சாமினு தான் கூப்பிடுவாரு. ஏன்னா அந்த அளவுக்கு ஆன்மீகத்திற்குள் நுழைந்து நிறைய விஷயங்கள் பேசுபவர் அவர். ஆன்மீகத்திற்குள் போகப் போக பெருந்தன்மையும், முதிர்ச்சியும், சகிப்புத்தன்மையும், புரிதலும் வந்தால் தானே அது ஆன்மீகம். இவர் ஆன்மீகத்துக்கு உள்ள போறேன்னு சொல்லிட்டு, வெளிய அசிங்கமா பேச ஆரம்பிச்சாரு.
உதாரணத்திற்கு, சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்கு தெரியாதுனு சொல்லியுள்ளார் இளையராஜா. இது அவருக்கு தேவையா. ரமண மகரிஷி ஒருவர் தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்பதை தான் சொல்லவருகிறாராம். கொஞ்சமாது ஆன்மீக புரிதல் உள்ளவனாக இருந்திருந்தால், இப்படி பேசி இருப்பாரா.
ஏசு கிறிஸ்துவ கோடிக்கணக்கான மக்கள் நம்புறாங்க. அப்போ அத்தனை பேரை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா. இவர் ஒன்னும் வரலாற்று ஆசிரியர் கிடையாது. ஒரு கூற்ற சொல்ல வருபவர் அதை மட்டும் சொல்லிவிட்டு செல்ல வேண்டியது தானே. அத்தனை பேரை கேலப்படுத்துகிற, ஒரு கேவலமான ஈன புத்தி இருக்குல்ல, அதுனால தான் அவரை மட்டமான மனிதர்னு நான் சொல்றேன்” என காட்டமாக பேசியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
இதையும் படியுங்கள்... விஜய் தேவரகொண்டாவை கரம்பிடித்தபடி போட்டோ வெளியிட்டு... நடிகை சமந்தா சொன்ன குட் நியூஸ் - வாழ்த்தும் ரசிகர்கள்