MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயிலர் 2 Update: முத்துவேல் பாண்டியனுக்கு உதவும் பாலிவுட் பாட்ஷா - வெளியானது மாஸ் அப்டேட்!

ஜெயிலர் 2 Update: முத்துவேல் பாண்டியனுக்கு உதவும் பாலிவுட் பாட்ஷா - வெளியானது மாஸ் அப்டேட்!

Jailer 2  Update: 'ஜெயிலர் 2'- திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஷாருக் கான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வெறும் கௌரவ தோற்றமாக இல்லாமல், கதையின் முக்கிய திருப்புமுனையாக அமையும்  கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 02 2026, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தியேட்டரில் மாஸ் பறக்கும்.!
Image Credit : X

தியேட்டரில் மாஸ் பறக்கும்.!

இந்தியத் திரையுலகின் இமயமலை என்று கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் திரையுலகின் பாட்ஷா ஷாருக் கான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் ஒரே திரையில் தோன்றுவது என்பது பல கோடி ரசிகர்களின் நீண்ட கால கனவாகும். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2'  குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தில் ஷாருக் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
தோஸ்து மக்கா தோஸ்து
Image Credit : Instagram

தோஸ்து மக்கா தோஸ்து

ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் வருகை திரையரங்குகளை அதிர வைத்தது போல, இரண்டாம் பாகத்தில் அந்த இடத்தை ஷாருக் கான் நிரப்ப உள்ளார். இப்படத்தில் அவர் வெறும் கௌரவத் தோற்றத்தில் மட்டும் நடிக்காமல், கதையின் திருப்புமுனைக்குக் காரணமான ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, படத்தில் முத்துவேல் பாண்டியனாக வரும் ரஜினிகாந்தின் நீண்ட கால நெருங்கிய நண்பராக ஷாருக் கானின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

Related Articles

Related image1
Jailer 2: கேரளாவில் 'ஜெயிலர்' வேட்டை: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!
Related image2
Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!
35
வடக்கில் ஷாருக்கான.! தெற்கில் ரஜினி.!
Image Credit : Twitter

வடக்கில் ஷாருக்கான.! தெற்கில் ரஜினி.!

முத்துவேல் பாண்டியனின் கடந்த கால வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு முக்கியமான பிணைப்பாகவும், இக்கட்டான சூழலில் அவருக்குத் துணை நிற்கும் 'மாஸ்' கதாபாத்திரமாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மற்ற மொழி நட்சத்திரங்களை இணைப்பது என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை. 'ஜெயிலர் 2' திரைப்படத்தை உண்மையான 'பான் - இந்தியா' திரைப்படமாக மாற்றும் நோக்கில் படக்குழு செயல்பட்டு வருகிறது.

45
அட்டகாசம் படைக்கும் அனிருத்தின் அதிரடி இசை
Image Credit : Rajinikanth\Instagram

அட்டகாசம் படைக்கும் அனிருத்தின் அதிரடி இசை

வட இந்தியச் சந்தையில் ஷாருக் கானுக்கு இருக்கும் அசுரத்தனமான செல்வாக்கு, படத்திற்கு மிகப்பெரிய வசூல் ரீதியான பலத்தைத் தரும் என்பது படக்குழுவின் கணிப்பு. அனிருத்தின் அதிரடி இசையில், ரஜினியும் ஷாருக் கானும் ஒரே பிரேமில் தோன்றும் அந்தத் தருணம், இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த சினிமா அனுபவங்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

55
இணையும் இரு பெரும் தலைகள்.!
Image Credit : Rajinikanth\Instagram

இணையும் இரு பெரும் தலைகள்.!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இரு பெரும் மாஸ்ஹீரோக்கள் இணைவது 'ஜெயிலர் 2' மீதான ஆர்வத்தை உலக அளவில் கொண்டு சென்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜெயிலர் 2
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Recommended image2
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!
Recommended image3
Karuppu: கருப்பு படத்தின் முதல் விமர்சனத்தால் ஆடிப்போன கோலிவுட்! சத்தமில்லாமல் தயாரான தரமான சம்பவம்!
Related Stories
Recommended image1
Jailer 2: கேரளாவில் 'ஜெயிலர்' வேட்டை: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!
Recommended image2
Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved