- Home
- Cinema
- Jailer 2 : ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்க ரெடியான ஜெயிலர் 2... முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?
Jailer 2 : ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்க ரெடியான ஜெயிலர் 2... முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?
Jailer 2 Record : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வர உள்ள ஜெயிலர் 2 திரைப்படம் முன்பதிவின் மூலம் பல கோடி வசூலை வாரிசுருட்டி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

ஜெயிலர் 2 ரெக்கார்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அட்வான்ஸ் புக்கிங் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்பதிவு தொடங்கிய ஆரம்பத்தில் டிக்கெட் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாகச் சென்னையின் முன்னணி திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஹவுஸ்ஃபுல் ஆகும் தியேட்டர்கள்!
ஜெயிலர் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தற்போது புக் மை ஷோவில் பல திரையரங்குகளுக்கான முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையின் பிரபலமான மாயாஜால் திரையரங்கில் பெரும்பாலான திரைகளுக்கான முன்பதிவு இறுதிக்கட்டத்தில் உள்ளதாம்.
அதேபோல் பிவிஆர் மல்டிபிளக்ஸ், சத்யம் உள்ளிட்ட முன்னணி திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் பலவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சில சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் காலை 8.30 மணி மற்றும் 9 மணி முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் இன்னும் கிடைப்பதாகத் தெரிகிறது. முன்பதிவு இதே வேகத்தில் தொடர்ந்தால், முதல் நாள் காட்சிகள் மட்டுமின்றி முதல் வாரத்தின் பல காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட் வேகத்தில் டிக்கெட் விற்பனை!
தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் ரஜினிகாந்த் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் போதிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை நல்ல வேகத்தில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல் நாள் உலகளாவிய வசூலில் ஜெயிலர் 2 மிகப்பெரிய சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ரூ.40 கோடியை கடந்த அட்வான்ஸ் புக்கிங்?
ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய முன்பதிவு வசூல் இதுவரை ரூ.40 கோடியைக் கடந்துள்ளதாம். இதில் கேரளாவில் மட்டும் சுமார் ரூ.4.5 கோடி அளவுக்கு அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜன நாயகன் வசூலை முந்துமா ஜெயிலர் 2?
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், உலகளவில் ரூ.500 கோடி அளவுக்கு வசூலித்ததாகத் தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் எந்த அளவுக்குச் சாதனை படைக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இப்படம் உலகளவில் ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்களில் கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, விஜய்யின் 'ஜன நாயகன்' மற்றும் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படங்களின் வசூலை ஜெயிலர் 2 முதல் மூன்று நாட்களிலேயே முந்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால், இந்தக் கணிப்புகள் நிஜமாகுமா என்பது படம் வெளியான பிறகு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தே தெரியவரும்.
ஜெயிலர் 2 படத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.. 7 நாட்கள் வசூல் வேட்டை?
ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டுத் தேதியும் அதன் வசூலுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையக்கூடும். அக்டோபர் 15ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் இப்படத்திற்கு அடுத்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை விடுமுறைகள் வருவது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் முதல் வாரத்தில் தொடர்ச்சியாகத் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக முதல் நான்கு நாட்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், பண்டிகை விடுமுறையிலும் டிக்கெட் விற்பனை அதிகரிக்கக்கூடும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் கால வெளியீடுகளுக்கு இணையாக ஜெயிலர் 2 படத்திற்கும் சாதகமான வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் தேர்வு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ரூ.1000 கோடி கிளப்பில் இணைவாரா சூப்பர் ஸ்டார்?
முதல் பாகமான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நெல்சன் திலீப்குமார் மீண்டும் ரசிகர்களைக் கவரும் வகையில் திரைக்கதையை அமைத்திருந்தால், ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் புதிய உச்சத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.1000 கோடி என்ற பிரம்மாண்ட வசூல் இலக்கை ஜெயிலர் 2 எட்டுமா என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

