- Home
- Cinema
- Rajinikanth : பாட்ஷா 2-வையே ரிஜெக்ட் பண்ணிய நான் ஜெயிலர் 2-வுக்கு ஓகே சொன்னது ஏன்? ரஜினிகாந்த் ஓபன் டாக்
Rajinikanth : பாட்ஷா 2-வையே ரிஜெக்ட் பண்ணிய நான் ஜெயிலர் 2-வுக்கு ஓகே சொன்னது ஏன்? ரஜினிகாந்த் ஓபன் டாக்
Rajinikanth Speech : வழக்கமாக எப்போது நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லாஞ்ச் வைப்போம். ஆனால் தயாரிப்பாளர் தான் இம்முறை வித்தியாசமாக செய்யலாம் என முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினிகாந்த் ஸ்பீச்
ஜெயிலர் வெற்றியடைந்த பின், அதன் சீக்குவல் செய்யலாம் என சொன்னார்கள். எப்போதுமே இரண்டாம் பாகத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன். சீக்குவல் என்று சொன்னாலே பொதுவாக சரக்கு கம்மியாகிடுச்சு, க்ரியேட்டிவிட்டி கம்மியாகிடுச்சுனு சொல்லிட்டு, நம்ம ஏற்கனவே என்ன பண்ணிருந்தமோ, அதுலயே கொஞ்சம் உப்பு காரமெல்லாம் போட்டு பண்ணிடுவாங்கனு எனக்கு ஒரு இம்பிரஷன் இருக்கு. பாட்ஷா கூட நிறைய வாட்டி கேட்டாங்க, ஆர்.எம்.வீரப்பன் நல்லா கதை, ஸ்கிரீன்பிளே எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்தாரு, ஆனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. அதன்பின்னர் பேட்ட படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என சொன்னார்கள். விஜய் சேதுபதி பழிவாங்குவது போல் கதை ரெடி பண்ணி இருந்தார்கள். இருந்தாலும் எனக்கு அதிலும் ஈடுபாடு வரல.
Jailer 2 First Review : வந்தாச்சு ஜெயிலர் 2 முதல் விமர்சனம்... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
ஜெயிலர் 2 ஓகே சொன்னது ஏன்?
ஆனால் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி, ஓடிடியில் வந்தப்போ, அதை பார்த்தபோது, அதில் நாலைந்து இடங்களில் தனக்கு பின்னாடி மிகப்பெரிய நெட் ஒர்க்கே இருக்கு. இண்டர்நேஷனல் லெவல்ல பெரிய குரூப் இருக்குனு வர்மா சொல்வார். அதேபோல் 1000 கோடிக்கும் அதிகமான பணத்துடன் கூடிய 3 கண்டெய்னர்கள் ஜெயிலரிடம் இருக்கு, அதனால வர்மா குரூப் எப்படி விடுவாங்க என்பது போன்ற லீடு ஜெயிலர் முதல் பாகத்திலேயே இருந்தது. அதோடு என்னோட வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமும் இதில் இருக்கிறது. அதனால் செய்ய முடிவு செய்தேன்.
நோ சொன்ன நெல்சன்
ஜெயிலர் ரிலீஸ் ஆனபிறகு நெல்சனுக்கு நேஷனல் லெவல்ல டிமாண்ட் வந்திருச்சு. இந்தி, தெலுங்கு, தமிழ்ல பெரிய புரொடக்ஷன் ஹவுஸ் க்யூவுல நின்னாங்க. அவரை அழைத்து ஜெயிலர் 2 ஐடியா சொன்னபோது அதெல்லாம் வேண்டாம் சார்னு சொன்னார். நானும் சரி வேண்டாம்னு விட்டுட்டேன். அதன்பின்னர் வேட்டையன் ஷூட்டிங் டைம்ல ஒரு போன் கால் வந்ததது நெல்சனிடம் இருந்து. சார் நீங்க சொன்ன மாதிரி ஜெயிலர் 2 பண்றதுக்கு நல்ல சான்ஸ் இருக்கு, எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்கனு கேட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன்.
தமன்னாவுக்கு சிபாரிசு செய்த ரஜினி
படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ் எல்லாருமே சூப்பரா ஆக்டிங் பண்ணிருக்காங்க. படத்துல ஒரே ஒரு மிஸ்ஸிங் தமன்னா தான். தமன்னாவை ஒரு சாங்ல வச்சிக்கலாம் சார்னு நெல்சன் கிட்ட சொன்னேன், அவரு, சார் உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி வச்சிக்க முடியாது சார்னு சொல்லிட்டார். எனக்கு பிடிக்கும்னு இல்ல, ஜனங்களுக்கு பிடிக்கும் அதுனால தான் கேட்டேன்னு சொன்னேன் என ரஜினி கூறினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்திடம் சில கேள்விகளை கேட்டதோடு, மேடையிலேயே அவரை கலாய்த்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

