- Home
- Cinema
- IMDb: ஜன நாயகன், ஜெயிலர் 2 இல்லை... IMDb லிஸ்டில் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கும் படம் எது தெரியுமா?
IMDb: ஜன நாயகன், ஜெயிலர் 2 இல்லை... IMDb லிஸ்டில் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கும் படம் எது தெரியுமா?
IMDb: டாக்ஸிக், ஜன நாயகன், ஜெயிலர் 2 போன்ற படங்கள் பேசப்பட்டாலும், IMDb வாக்கெடுப்பில் வேறு படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரசிகர்கள் அதிகம் எதிர்ர்பார்த்து காத்திருக்கும் படம்
2026 சினிமா காலண்டர் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்ட பட்ஜெட்டுகள் மற்றும் பான்-இந்தியா கதைக்களங்களுடன் பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. குறிப்பாக ‘ஜன நாயகன்’, ‘ஜெயிலர் 2’, ‘டாக்ஸிக்’ மற்றும் ‘ராமாயணம்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய சினிமா ரசிகர்கள்
தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்களின் விவாதங்களில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம் ‘Most Awaited Movies’ பட்டியல்தான். சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் எந்த படம் பாக்ஸ் ஆபிஸை ஆளப்போகிறது என்ற கேள்வி மீண்டும் முன்வந்துள்ளது. அதேசமயம், ரசிகர்களின் உடனடி ஆர்வத்தை பிரதிபலிக்கும் IMDb பட்டியல் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
டாக்ஸிக் படம்
இந்தப் பட்டியலில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. KGF வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு யஷ் திரும்பியதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீடு தள்ளிப்போனாலும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறையாமல், மாறாக அதிகரித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
மைன் வாபஸ் ஆவுங்கா
ஆனால் IMDb பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ‘மைன் வாபஸ் ஆவுங்கா’ திரைப்படம். இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கும் இந்தப் படத்துக்கு சுமார் 23.3 சதவீத ரசிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தில்ஜித் தோசாஞ்ச், ஷர்வரி மற்றும் வேதாங் ரெய்னா நடித்துள்ள இந்தப் படம் தற்போது எதிர்பார்ப்பின் மையமாக மாறியுள்ளது.
டாக்ஸிக், ராமாயணம்
‘டாக்ஸிக்’ சுமார் 15.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், படம் வெளியாகும் நேரத்தில் பெரிய சாதனை படைக்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’ போன்ற படங்கள் இந்த பட்டியலில் இல்லாதது சிலருக்கு உருவாகியுள்ளது.
ஜன நாயகன்
அதேபோல தமிழில் உருவாகியுள்ள ஜன நாயகன், ஜெயிலர் 2 படங்கள் இப்பட்டியலில் இல்லாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் IMDb தரவரிசை அந்நேர டிரெண்ட் மற்றும் ரசிகர்களின் உடனடி ஆர்வத்தை கொண்ட பட்டியலில், அடுத்த சில மாதங்களில் இந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சினிமா ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

