MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

CM Vijay Dress Code : விஜய் முதல்வராக பதவியேற்றதில் இருந்து கோட் சூட்டில் தான் காட்சியளித்தார். தற்போது அவர் பட்டு வேட்டி சட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : May 29 2026, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Dress Code Changed
Image Credit : X

Vijay Dress Code Changed

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த அரசியல் நிகழ்வாக மாறியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து அரசியலுக்குள் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்களிடையே அபார வரவேற்பைப் பெற்ற அவர், பெருவாரியான வாக்குகளை பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அணிந்திருந்த ஆடை பாணியே ரசிகர்களிடையே தனி ட்ரெண்டாக மாறியது. அவரது தோற்றத்தை பின்பற்றிய ஆதரவாளர்கள், அதே நிற உடைகளிலும் அதே ஸ்டைலிலும் தேர்தல் களத்தில் தோன்றி ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் தேர்தல் களம் அரசியல் மேடையைத் தாண்டி ஒரு பெரிய கலாச்சார அலைபோல மாறியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கோட் சூட்
Image Credit : CM Vijay FB

கோட் சூட்

தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர், கட்சித் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்பு விழாவில் எந்த மாதிரியான உடையில் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை அதிகமாக இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையாக விஜய் கம்பீரமான கோட்-சூட் அணிந்து முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தோற்றமே சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அதன்பின்னரும் அவர் தினமும் காலை நேரத்தில் கோட்-சூட் உடையுடன் தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு பணிகளை கவனித்து வந்தார்.

Related Articles

Related image1
Now Playing
CM Vijay : பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்.! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Related image2
CM Vijay: தேசிய அரசியலில் சங்கமிக்கும் தமிழக முதல்வர் விஜய்.! ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி.! சோனியா, மோடியை சந்திக்கும் தளபதி.!
34
பட்டு வேட்டி சட்டையில் வந்த விஜய்
Image Credit : X

பட்டு வேட்டி சட்டையில் வந்த விஜய்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று அவர் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தலைமைச் செயலகத்திற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. எப்போதும் மேற்கத்திய ஸ்டைல் உடைகளில் காணப்பட்ட விஜய், இன்று பாரம்பரியமான பட்டு வேட்டி மற்றும் சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார்.

44
காரணம் என்ன?
Image Credit : X

காரணம் என்ன?

தனது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷ் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அவர், அதே பாரம்பரிய உடையிலேயே செயலகத்திற்கு வந்தார்.

பட்டு வேட்டி-சட்டையில் கம்பீரமாக நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் “மாடர்ன் லுக்கிலும் மாஸ்… பாரம்பரிய உடையிலும் கம்பீரம்!” என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Recommended image2
Sigma : முதல்வர் விஜய் மகன் இயக்கிய சிக்மா எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா
Recommended image3
Pandian Stores 2 : கதிரை அடிவெளுத்த சக்திவேல்... கோமதியிடம் சிக்கும் சரவணன் - அஞ்சலி
Related Stories
Recommended image1
Now Playing
CM Vijay : பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்.! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Recommended image2
CM Vijay: தேசிய அரசியலில் சங்கமிக்கும் தமிழக முதல்வர் விஜய்.! ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி.! சோனியா, மோடியை சந்திக்கும் தளபதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved