- Home
- Cinema
- ‘வந்தியத்தேவன்’ கார்த்தி பாடிய குத்துப்பாட்டு கேட்க ரெடியா...! சர்தார் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு
‘வந்தியத்தேவன்’ கார்த்தி பாடிய குத்துப்பாட்டு கேட்க ரெடியா...! சர்தார் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு
sardar : சர்தார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், மலையாள நடிகை ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். ஸ்பை திரில்லர் படமான இதில் பல்வேறு விதமான கெட்-அப்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் பார்த்ததும் திரிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா - ஜோதிகா
சர்தார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சர்தார் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சர்தார் படத்தில் இடம்பெறும் ஏறுமயிலேறி என்கிற குத்து பாடலை வந்தியத்தேவன் கார்த்தி பாடியுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் பாடியபோது எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஜிவி. இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்னது....விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா? தீயாய் பரவும் தகவல் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
