பொன்னியின் செல்வன் பார்த்ததும் திரிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா - ஜோதிகா
Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ, அதேபோல் திரையுலக பிரபலங்களும் இப்படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோரு, இயக்குனர் ஷங்கரும் படத்தை பார்த்து டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
நடிகர் கமல்ஹாசனோ இதற்கு ஒருபடி மேலே போய், படக்குழுவுடன் திரையரங்கில் படத்தை பார்த்து, பின்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் படத்தை பற்றி புகழ்ந்து பேசினார். இந்த வெற்றி தன் படத்துக்கு கிடைத்த வெற்றியைப் போல் உணர்வதாக தெரிவித்திருந்தார் கமல். அதுமட்டுமின்றி இப்படம் மூலம் தமிழ்சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் கமல்.
இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் ரூ.300 கோடியை தாண்டிய வசூல்... பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்து ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய பரிசை போட்டோ எடுத்து பதிவிட்டு இது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருப்பதாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் தயாரிப்பாளருடன் அடுத்தடுத்து 2 படங்கள்... ரஜினியின் கால்ஷீட்டை கொத்தாக தட்டித்தூக்கிய லைகா