பொன்னியின் செல்வன் தயாரிப்பாளருடன் அடுத்தடுத்து 2 படங்கள்... ரஜினியின் கால்ஷீட்டை கொத்தாக தட்டித்தூக்கிய லைகா
நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்களை பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இதுதவிர வஸந்த் ரவி, ஷிவராஜ்குமார், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்களை பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மொத்தமாக கால்ஷீட் வழங்கி உள்ளாராம் ரஜினி. ஜெயிலர் படத்தில் நடித்து முடித்த பின் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்
அதன்படி ரஜினியின் 170 மற்றும் 171-வது படத்தை லைகா தயாரிக்க உள்ளது. ரஜினியின் 170-வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான டான் படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரஜினியின் 171-வது படத்தை இயக்க இரு இயக்குனர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் ஒருவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றொருவர் கண்ணூம் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இவர்கள் இருவரில் ரஜினி யாருக்கு வாய்ப்பளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... மாடர்ன் அரண்மனை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ