ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பர்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் யார்... யார் என்கிற முழு விவரம் லீக்காகி உள்ளது. அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மணிகண்டன்
சீரியல் நடிகர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திர நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜே மகேஸ்வரி
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகேஸ்வரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். சமுத்திரகனிக்கு ஜோடியாக ரைட்டர் படத்தில் நடித்திருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீசான கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
பாடகி ராஜேஸ்வரி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன பாடகி ராஜேஸ்வரியும் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் தற்போது சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி வருகிறார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலை பாடியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மைனா நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்து பிரபலமான நந்தினியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். சமீப காலமாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும் கலக்கி வரும் இவர், கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
விஜே கதிரவன்
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் விஜே கதிரவன். அதன்பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்த இவர் தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.
மெட்டி ஒலி சாந்தி
சினிமாவில் டான்சராக இருந்து வந்தவர் சாந்தி. இவர் மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்.
ஆயிஷா
மாடல் அழகியான ஆயிஷா ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது சத்யா சீரியல் மூலம் தான். அதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆயிஷா. இவர் தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்து பிரிந்த இவர், தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
அமுதவாணன்
சின்னத்திரையில் புகழ்பெற்ற காமெடியனாக வலம் வருபவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். சமீபத்தில் கூட கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார். இவரும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஆடம்பர மாளிகை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ
ஸ்ரீநிதி
சீரியல் நடிகையான ஸ்ரீநிதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்கிற சீரியல் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரும் பிக்பாஸ் 6 போட்டியாளர்களுள் ஒருவர் ஆவார்.
ராபர்ட் மாஸ்டர்
சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். இடையே வனிதா உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய இவர், தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.
விசித்ரா
1990-களில் ரஜினி, சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விசித்ரா. கடந்த சில ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.
ஏடிகே
ராப் பாடகரான ஏடிகே-வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கடல் படத்தில் இடம்பெறும் மகுடி என்கிற பாடலையும், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் சோக்காலி என்கிற பாடலையும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிபி முத்து
டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. யூடியூப் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். சினிமாவிலும் ஒருசில படங்களில் நடித்து வரும் இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.
அசல் கொலார்
சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலாரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இவர் யூடியூபில் வைரல் ஹிட் அடித்த ஜோர்தால என்கிற பாடலை பாடியவர் ஆவார். இதுதவிர ஏராளமான சுயாதீன இசைப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார்.
ஷிவின் கணேசன்
கடந்த சீசன் முதல் திருநங்கைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த முறை நமீதா மாரிமுத்து கலந்துகொண்ட நிலையில், இம்முறை ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை ஒருவர் போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
ஜனனி
இலங்கையை சேர்ந்த ஜனனி என்கிற தொகுப்பாளினி பிக்பாஸ் 6-ல் பங்கேற்க உள்ளார். இதற்குமுன் அங்கிருந்து வந்து கலந்துகொண்ட லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் மிகவும் பேமஸ் ஆன நிலையில், ஜனனியும் அவ்வாறு மக்கள் மத்தியில் பாப்புலர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஷெரினா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடல் அழகி ஒருவர் கலந்துகொள்வது வழக்கம். இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களிலும் அவ்வாறே இருந்த நிலையில், இந்த சீசனிலும் ஷெரினா என்கிற மாடல் அழகி ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.
இதையும் படியுங்கள்... உலகநாயகனுடன் ஸ்பெஷல் ஷோ பார்த்த சோழர்கள்..வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு