உலகநாயகனுடன் ஸ்பெஷல் ஷோ பார்த்த சோழர்கள்..வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு
கமலஹாசன் உடன் விக்ரம், கார்த்தி இணைந்து பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ஷோ மற்றும் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ கிளிப்ஸை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலை தற்போது படமாக உருவாக்கி உலகம் முழுவதும் திரையிட்டு விட்டார் மணிரத்னம். சோழ இளவரசர்களாக விக்ரம், ஜெயம் ரவியும் அவரது தோழராக கார்த்தியும், இளவரசிகளாக திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராயும் வந்து கலக்கி இருந்த இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் சில நாட்களிலேயே 240 கோடிகளை தாண்டி விட்ட இதன் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிகளை தாண்டி இருந்தது. இது குறித்தான பதிவையும் பட குழு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கீர்த்தி சுரேஷ் ஸ்டைலில் செல்லப்பிராணியுடன் ஆயுத பூஜை கொண்டாடிய வரலட்சுமி
முன்னதாக நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த், ஷங்கர் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மேடையில் தங்களது பேச்சுக்களால் கவர்ந்திருந்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் உலக சினிமா ரசிகர்களை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆர் ஆர் ஆர் , கே ஜி எஃப் என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படங்கள் படைத்த சாதனையை தொடர்ந்து பெற்று வருகிறது பொன்னியின் செல்வன். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் கமலஹாசன் உடன் விக்ரம், கார்த்தி இணைந்து பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ஷோ மற்றும் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ கிளிப்ஸை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியை குறைத்து கொண்ட ராஷ்மிகா... குட் பை ப்ரோமோஷன் போட்டோஸ் இதோ