கீர்த்தி சுரேஷ் ஸ்டைலில் செல்லப்பிராணியுடன் ஆயுத பூஜை கொண்டாடிய வரலட்சுமி
தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த போதிலும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வரும் வரலட்சுமி சரத்குமார், ஆயுதபூஜை கொண்டாடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் சரத்குமார். இவரது மகளான வரலட்சுமி சரத்குமார் முன்னணி நாயகி ஆவதற்கான ரேஸில் தற்போது உள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் தனது தந்தையின் கோரிக்கையின் காரணமாக அந்த பட வாய்ப்பை நிராகரித்தார் வரலட்சுமி சரத்குமார் என கூறப்படுகிறது. பின்னர் பாலாஜி சக்திவேலின் காதல், வெங்கட் பிரபுவின் சரோஜா உள்ளிட்ட படங்களின் வாய்ப்புகளையும் முதலில் மறுத்து இருந்தார்.
பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் லண்டனை சேர்ந்த நடன கலைஞராக நடித்து அசத்தியிருப்பார். பின்னர் கன்னட படங்கள் பக்கம் திரும்பிய இவர் அங்கு இரண்டு படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தை நடித்து முடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை படத்தில் சூறாவளி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா இயக்கி இருந்த இந்த படத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டு விட்டார் வரலட்சுமி.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியை குறைத்து கொண்ட ராஷ்மிகா... குட் பை ப்ரோமோஷன் போட்டோஸ் இதோ
மேலும் செய்திகளுக்கு...மும்பையில் செட்டிலாகி விட்ட ஜோதிகா..வைரல் போட்டோஸ் இதோ
விக்ரம் வேதா, நிமுணன், சத்யா, மிஸ்டர் சந்திர மௌலி, ஈச்சரிக்காய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு போதுமான வரவேற்பை பெற்று தரவில்லை. தொடர்ந்து தமிழில் விஷாலுக்கு வில்லியாக சண்டக்கோழி 2 வில் பேச்சி என்னும் ரோலில் நடித்து கலக்கி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வில்லிக்கான வாய்ப்புகளே அதிகம் கிடைத்தன. தொடர்ந்து விஜய் நடித்த சர்க்கார் படத்தில் கோமளவவள்ளியாக வந்து அரசியல் தந்திரங்களை கையாண்டிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
மாரி 2, நீயா 2, கன்னி ராசி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த வரலட்சுமி சரத்குமாருக்கு இரவின் நிழல் நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள இவர் சமந்தாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான யசோதா மற்றும் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, வண்ணங்கள் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பிரபல நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த போதிலும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வரும் வரலட்சுமி சரத்குமார், ஆயுதபூஜை கொண்டாடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.