என்னது....விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா? தீயாய் பரவும் தகவல் இதோ
விஜய் நடிக்கும் 67வது படம் ஹாலிவுட் ரீமேக்காக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக மும்பை கேங்ஸ்டார் படமாக இது இருக்கும் என கூறப்பட்டது.
VARISU
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் என கூறப்படும் இந்த படத்தில் சரத்குமாரின் மூன்றாவது பிள்ளையாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
VARISU
அவர்களுடன் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் பார்த்ததும் திரிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா - ஜோதிகா
VARISU
இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. மேலும் வரும் தீபாவளிக்கு படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் ரூ.300 கோடியை தாண்டிய வசூல்... பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ
THALAPATHY 67
இந்நிலையில் விஜயின் 67வது படம் குறித்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வருகிறது. சமீபத்தில் உலகநாயனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் பிளாக் பாஸ்டர் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் லோகேஷ் மீது ரசிகர்களின் தனி கண்ணோட்டமே பதிந்துள்ளது.
THALAPATHY 67
இதன் காரணமாக தளபதி 67 தடபுடலாக மாஸ் காட்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் 67வது படம் ஹாலிவுட் ரீமேக்காக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக மும்பை கேங்ஸ்டார் படமாக இது இருக்கும் என கூறப்பட்ட நிலையில் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்னும் ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை லோகேஷ் பெற்றுள்ளாராம். இந்த செய்தியால் படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.