கஷ்டத்தில் கை கொடுக்க வேலைக்கு சென்ற லோகேஷ் கனகராஜின் காதல் மனைவி யார் தெரியமா! முதல் முறையாக கூறிய தகவல்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக, அறிமுகமான இவர்... முதல் படத்திலேயே அற்புதமான திரை கதையை, மிகவும் நேர்த்தியாக பட, இயக்கியுள்ளதாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றார்.
இந்தப் படத்தை தொடர்ந்து, இவர் இயக்கிய 'கைதி' திரைப்படம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்தது. காரணம் ஹீரோயின், பாடல் போன்ற அம்சங்கள் இல்லாமல் பரபரப்பான ஆக்ஷன் ட்ராமாவாக இயக்கி, அனைவரையும் பிரமிக்க வைத்தார். 'பருத்திவீரன்' படத்திற்கு பிறகு, கார்த்தியை, வித்தியாசமான கோணத்தில் இப்படம் பார்க்க செய்ததோடு மட்டும் இன்றி, கார்த்தியின் திரையுலக பயணத்தில் முக்கிய படமாகவும் அமைந்தது.
முதல்முறையாக மகன் அமீனுடன் இணைந்து நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்! பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு!
இந்த இரு படங்களுக்குப் பின்னர், அதிரடியாக தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு இது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கடைசியாக நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம்... 450 கோடி வசூல் சாதனை படைத்த படமாக மாறியது.
எனவே தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதும் உறுதியாகியுள்ளது.
பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!
மேலும் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ்... தன்னுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கும், மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், நல்ல வேலையில் இருந்தும் சினிமாவின் மீது கொண்ட ஆசையின் காரணமாக வேலையை விட்டுவிட்டு திரைப்படம் இயக்க வாய்ப்பை தேடினார். லோகேஷ்கனகராஜுக்கு நிலையான வருமானம் இல்லாத காரணத்தினால், இவருடைய மனைவி வேலை செய்து வேலை செய்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
lokesh kanagaraj is taking a break from social media platforms
தன்னுடைய குழந்தை ஏழு மாதம் இருக்கும் போது கூட, மனைவி வங்கி ஒன்றில் வேலை செய்ததாக லோகேஷ் கனகராஜ் உருக்கமாக கூறியுள்ளார். பின்னர் நான் இரண்டாவது படத்தில் கமிட்டான உடனேயே அவரை வேலையை விட சொல்லிவிட்டதாகவும் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Lokesh Kanagaraj
மேலும் லோகேஷ் கனகராஜுக்கு ஆத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தன்னுடைய மனைவி குறித்து மிகவும் உயர்வாக பேசி உள்ள லோகேஷ் கனகராஜ் பேச்சைக் கேட்டு, ரசிகர்கள் மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.