பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம் அந்த இடத்தில் குத்திய பாம்பு டாட்டூ! வேற இடமே கிடைக்கலையா? கலாய்க்கும் நெட்டிசன்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம், தன்னுடைய ஆன்மீக பக்தியை வெளிக்காட்டும் விதமாக டாட்டூஸ் குத்திக் கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாடலும், நடிகையுமான அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய சில தினங்களிலேயே, கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அபிராமி, பின்னர் முகேன் ராவை காதலிப்பதாக கூறினார்.
தொடர்ந்து நிலையான மனநிலையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடாமல், எப்போதும் அழுது கொண்டே இருந்ததாக ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளானதால், பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
150 கோடி செலவில் இன்டெர்நேஷனல் தரத்தில் தனுஷ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டில்.. இவ்வளவு வசதிகளா?
மேலும் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, இவர் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்த 'நேர் கொண்டப்பார்வை' பார்வை திரைப்படமும் வெளியானது. அபிராமி வெங்கடாசலத்தின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தாலும், இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அபிராமி வெங்கடாசலம்.. தற்போது தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'லியோ' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!
இந்நிலையில், அபிராமி.. தன்னுடைய ஆன்மீக பற்றை வெளிப்படுத்தும் விதமாக இவர் போட்டுள்ள டாட்டூஸ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. முதுகுக்கு பின்னால் நடராஜரின் சிலையை அபிராமி வெங்கடாசலம் பச்சை குத்தி கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, தனக்கு ஆன்மீகத்தை பற்றி யாரும் எந்த அறிவுரையும் கூற வேண்டாம்... இது என் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் படமெடுத்து அமர்ந்திருக்கும் பாம்பு டாட்டூ ஒன்றை தன்னுடைய அக்குளுக்கு கீழே அபிராமி பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட, குத்த வேற இடமே இல்லையா? என நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர். இந்த இரு டாட்டோவும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சி உடையில்... தோழிகளுடன் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்! இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!