வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!
நடிகை அமலாபால் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று, வெளிநாட்டில் உள்ள சிவன் கோவிலில் புனித நீராடி வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு... சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்த இவர், தற்போது தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
அதே போல் ஷூட்டிங் இல்லாத நாட்களில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக வெளியிடங்களுக்கு சென்று நேரம் செலவிடும் அமலா பால், சமீப காலமாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
Actor Mayilsamy : காற்றில் கலந்த காமெடி கிங்... நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது
அந்த வகையில், சமீபத்தில் கூட பழனி முருகன் கோவிலுக்கு தன்னுடைய அம்மாவுடன் சென்று வழிபாடு செய்து வந்த இவர், தற்போது மகாசிவராத்திரியை வெளிநாட்டில் உள்ள சிவன் கோவிலில் பூஜை மற்றும் புனித நீராடி கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது. அமலா பால் இந்த வருடம், இந்தோனேசியாவில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று, அங்கு பக்தர்கள் கடைபிடிக்கும் பழக்கத்தின் படி இந்த மஹா சிவராத்திரியை, அங்குள்ள குளத்தில் புனித நீராடி கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த சில புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை அமலா பால் பதிவு செய்து சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் லைக்குகளை போட்டுள்ளனர்.
அமலா பாலை போலவே பல நடிகர் நடிகைகள், இந்த ஆண்டு மஹா சிவராத்திரியை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் கொண்டாடினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களுருவில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி... ஹன்சிகா வேகமாக வளர்வதற்க்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரின் தாயார்? பரபரப்பு தகவல்!