150 கோடி செலவில் இன்டெர்நேஷனல் தரத்தில் தனுஷ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டில்.. இவ்வளவு வசதிகளா?
நடிகர் தனுஷ் புதிதாக கட்டியுள்ள வீட்டில் இருக்கும் வசதிகள் குறித்து, இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் வளர்ந்து நின்றவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான 'வாத்தி' படத்திற்கும் தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷ் ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி சில தினங்களில் ஆகும் நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டும் 20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!
Dhanush
மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் 'கேப்டன் மில்லர்' என்கிற படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக கட்டி வரும், வீட்டின் கிரகப்ரவேசம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வீட்டில் தனுஷ் என்னென்ன வசதிகளுடன் காட்டியுள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தனுஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு, மாமனார் வீடு அமைந்துள்ள 'போயஸ் தோட்டம்' பகுதியிலேயே குடியேற வேண்டும் என்பதற்காக, சுமார் 25 கோடி செலவில் சென்னை போயஸ் தோட்டத்தில் 8 கிரவுண்ட் அளவிலான நிலம் ஒன்றை வாங்கினார்.
எம்ஜிஆர் வழியில் மயில்சாமி; நகைகளை அடமானம் வைத்து உதவி செய்து வாழ்ந்த மனிதர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் இந்த இடத்தில், தனுஷ் தன்னுடைய மகன் மனைவியுடன் குடியேற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வீடு கட்டுவதற்கான பூமி பூஜையும் 2021 ஆம் ஆண்டு போடப்பட்டது. இதில் நடிகர் தனுஷின் குடும்பத்தினர், ரஜினிகாந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, வெளிநாட்டை சேர்ந்த இன்ஜினியர்களை கொண்டு... தனுஷ் இந்த வீட்டை ஹைடெக் மாடலிலும் கட்ட முடிவு செய்தார். 4 தளம் கொண்ட இந்த வீட்டை, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வகையில் தனுஷ் டிசைன் செய்துள்ளார்.
ஒரு பிரமாண்ட நீச்சல் குளம், ஒரு ஆடம்பர உட்புற விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர் ஆகியவை உள்ளன. அதேபோல் தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்கள் ஆசைப்பட்டது போன்ற தனி அறைகள் சர்வதேச அளவில் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டு உருவாக்க பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு அறையிலும் இன்டீரியர் வேலைகளுக்காகவே பல லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனைவி, மகன்களுடன் தனுஷ் இந்த வீட்டில் குடியேறுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், மனைவியுடனான விவாகரத்து தனுஷின் வாழ்க்கையையே திருப்பி போட்டது. எனவே பல கோடி செலவு செய்து கட்டிய வீட்டில், பெற்றோரை குடியேற்று அழகு பார்த்துள்ளார் தனுஷ். இதுவரை வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகாத நிலையில், கிரகப்ரவேச புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.