குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!
பெங்களூருவில் நடைபெற்ற தனது அண்ணன் சத்திய நாராயணனின் சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய் ஆகும். கெய்க்வாட்' என்பது இவர்களது குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் கெய்க்வாட் என்று அழைக்கப்பட்டனர்.
ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். சிலர் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான். ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.
ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார். ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் ஆனார்.
ரானோஜிராவ் - ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த். தான் எவ்வளவு பெரிய நடிகர் என்ற எந்த பந்தா இல்லாமல் இளம் நடிகர்களுக்கு உதாரணமாக குடும்பத்துக்கு முக்கியத்துவம் தருகிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் தற்போது தனது அண்ணன் சத்திய நாராயணனின் சதாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.