பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!
ரசிகர்கள் மனதை மயக்கும் குரல் வளம்கொண்ட சின்னக்குயில் சித்ரா, தற்போது மேஜிக் ஷோ ஒன்றில் பங்கேற்று அந்தரத்தில் நின்றபடி பாடல் பாடியுள்ள வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க செய்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், தன்னுடைய சிறுவயதில் இருந்தே... கர்நாடக இசை சங்கீதம் பயின்றவர். மேலும் கேரளாவில் உள்ள இசை கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக மத்திய அரசு படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்க தொகையையும் பெற்றவர்.
ஆரம்ப காலங்களில் கே.ஜே.ஏசுதாஸ் போன்ற முன்னணி பாடகர்களுடன் இசை நிகழ்ச்சியில் பாடி வந்த சித்ரா, சில மலையாள திரைப்படங்களிலும் பின்னணி பாடினார். இவருடைய குரல் மலையாள ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால், தமிழ் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர்கள் கவனம் இவர் மீது விழுந்தது. அந்த வகையில் கடந்த 1985 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தில் இவரை சித்திராவை பாட வைத்தார்.
இந்த படத்தில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக இருக்கும், கே.எஸ்.சித்ரா... இதுவரை பல்வேறு மொழிகளில் சுமார் 25,000 அதிகமான பாடல்களை பாடி உள்ளார். அதேபோல் தற்போதைய இளம் இசையமைப்பாளர்கள் முதல் பல்வேறு மூத்த இசையமைப்பாளர்கள் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.
சமீப காலமாக திரைப்படங்களில் பாடுவது மட்டுமின்றி, சில இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடுவராக இருந்து வரும் சித்ரா. குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர் என்பதால், எப்போதுமே குழந்தைகளுக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார். இவர் மலையாளத்தில் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில், நடத்தப்பட்ட மேஜிக் ஷோவில் பங்கேற்றுள்ளார். அப்போது சித்ராவை அந்த மேஜிக் மென் அந்தரத்தில் நிற்க வைத்தது மட்டும் இன்றி பாடல் ஒன்றையும் பாட வைத்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.