Nayanthara: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா ? வெளியான பரபரப்பு தகவல்..!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், இந்த குழந்தைகளை வாடகை தாயாக இருந்து பெற்று கொடுத்தவர் யார்? என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியிலும், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று, நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை பிறந்துள்ள தகவல் தான்.
சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த நயன் - விக்கி ஜோடி கடந்த ஜூன் மாதம் தான், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மிக பிரமாண்டமாக நடந்த இவர்களுடைய திருமண நிகழ்ச்சி விரைவில் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என குழந்தை பிறந்துள்ள தகவலை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் இந்த ஜோடிகள்.
மேலும் செய்திகள்: Biggboss Promo: ஜிபி முத்துவை பார்த்தல் காண்டாகுது! மனுஷ அங்கையும் இதை ஆரம்பிச்சிட்டாரா கடுப்பான தனலட்சுமி!
வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின்னர், கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை இருக்கும் பக்கத்தில் தான், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில விதிமுறைகளும் உள்ளது.
ஆனால் நயன் - விக்கி இருவரும் அதற்கான வழிமுறைகளை பின்பற்றினார்களா? அல்ல சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனரா என சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எழும் விமர்சனங்களை, சற்றும் காதல் போட்டு கொள்ளாமல் நயன் - விக்கி இருவரும் பெற்றோர் ஆன சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Sneha Birthday: தூங்கி எழுந்த முகம்... மழை... வானவில்லை ரசித்தபடி இயற்கையோடு பிறந்தநாள் கொண்டாடும் சினேகா!
இது ஒரு புறம் இருக்க, தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுக்கு வாடகை தாயாக இருந்தவர் யார்? என்கிற தகவல் கசிந்துள்ளது.
அவர் கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உறவினராம். ஆனால் நயன்தாராவிற்கு எந்த முறையில் உறவினர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் அவருக்கு வாடகை தாயாக இருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்த பிறகு தான், அதற்கான செயல்பாடுகள் துவங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: Biggboss Tamil: ஜிப் போடாமல் சிக்கிய ஜிபி முத்து!அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டேயே மா!