Sneha Birthday: தூங்கி எழுந்த முகம்... மழை... வானவில்லை ரசித்தபடி இயற்கையோடு பிறந்தநாள் கொண்டாடும் சினேகா!
இன்று நடிகை சினேகா தன்னுடைய 41 ஆவது பிறந்தநாளை, இயற்க்கை எழில் கொஞ்சும் இடத்தில்... மழை, வானவில்லை ரசித்தபடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகைகளில் ஒருவராக இருந்து பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சினேகா இன்று தன்னுடைய 41 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
குறிப்பாக தமிழ் மொழியில், 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சினேகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, போன்ற பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்: Thunivu : பொங்கல் விருந்தாக வரும் துணிவு... தியேட்டர் லிஸ்ட் உடன் போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களின் காதலுக்கும், அன்பிற்கும் அடையாளமாக... விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற அழகிய மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரையுலகில் நடித்து வந்த சினேகா குழந்தை பிறந்த பின்னர், ஒரு சிறு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் காம்பேக் கொடுத்தார்.
மேலும் செய்திகள்: Biggboss Tamil: ஜிப் போடாமல் சிக்கிய ஜிபி முத்து!அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டேயே மா!
அந்த வகையில், தனுஷுக்கு ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... இரண்டாவது முறையாக கர்ப்பமானார். மகள் பிறந்த பிறந்தார், திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டாலும், விளம்பரங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது, தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள், தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி... குளிக்க சென்றபோது இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம்..! கோவில் குளத்தில் மூழ்கி பலி..!