Thunivu : பொங்கல் விருந்தாக வரும் துணிவு... தியேட்டர் லிஸ்ட் உடன் போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக செய்தி வெளியானதும், மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், அப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் என போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய வங்கிக் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் எச்.வினோத். இப்படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மாதம் பேங்காக் சென்றது படக்குழு. அங்கு அஜித் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்... அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்
பேங்காக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக செய்தி வெளியானதும், மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், துணிவு பொங்கல் ரிலீஸ் என போஸ்டர் ஒட்டியதோடு மட்டுமின்றி, எந்தெந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்கிற லிஸ்ட்டையும் ஒட்டி மாஸ் காட்டி உள்ளனர்.
இதன்மூலம் துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்மூலம் 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு பின்னர் 9 ஆண்டுகள் கழித்து அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் வாரிசு படக்குழு பொங்கல் ரிலீசை உறுதி செய்தாலும், அஜித்தின் துணிவு படக்குழு அப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பொங்கலுக்கு விஜய்யின் வாரிசுடன் மோத உள்ள அஜித்தின் துணிவு.. இதில் உதயநிதி ரிலீஸ் பண்ண போறது எந்தபடம் தெரியுமா?