'வாரிசு' படத்திற்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ்..! இயக்குனரின் இந்த கணக்கு சொதப்பிடுச்சோ?
விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்திற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருவது படகுழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்க்கு முக்கிய காரணமாக ரசிகர்கள் கூறுவது இயக்குனரின் கணிப்பு குறித்து தான்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி, முதல் முறையாக தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் 'வாரிசு' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம், சரத்குமார், யோகி பாபு, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
அதே நேரத்தில் விஜய் கடந்த சில வருடங்களாகவே... தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், 'வாரிசு' திரைப்படம் ஆக்ஷன் கலந்த குடும்ப செண்டிமெண்டோடு வெளியாகியுள்ளது. எனவே பல வருடங்களுக்கு பின்னர் பழைய விஜய்யை பார்க்க முடிவதாகவும் கூறி வருகின்றனர்.
'வாரிசு' படத்தில் அணைத்து அம்சங்களும் இருந்தாலும், மிகப்பெரிய ட்ரா பேக்காக பார்ப்படுவது, இயக்குனர் வம்சி தெலுங்கு ஆடியன்ஸ் மற்றும் தமிழ் ஆடியன்ஸ் என இரு தரப்பு ரசிகர்களையும் சேடிஸ்பை செய்ய வேண்டும் என, இப்படத்தை இயக்கி உள்ளது தான் என, நடுதர ஆடியன்ஸ் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.