உலக அரங்கில் வெற்றி கொடி நாட்டிய.. நாட்டு கூத்து பாடல்! கோல்டன் குளோப் விருதை குடும்பத்தோடு கொண்டாடிய RRR குழ!
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடல், கோல்டன் குளோப் விருதை பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இந்த விருது விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினரின் புகைப்படங்கள் இதோ...
வித்யாசமான கதைகளை இயக்குவதன் மூலம் ரசிகர்கள் மனதில், தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் கடந்தாண்டு நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தில் உருவான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்-யை தவிர பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவுகன், ஆலியாபட், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் 1200 கோடி அளவிற்கு வசூல் சாதனை செய்தது.
மேலும் 95 ஆவது ஆஸ்கர் விருது இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குலோப் விருதை பெற்றுள்ளது. இதனை இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார்.
இதற்கான விருதுவிழா, லாஸ்ட் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிலையில்.... இதனை RRR குடும்பமே சென்று பெருமையோடு பெற்றுள்ளனர். கோல்டன் குளோப் விருது விழாவில், நடிகர் ராம்சரண் மற்றும் அவருடைய மனைவி உபாசனா, ஜூனியர் என்டிஆர் அவருடைய மனைவி லட்சுமி பிரணதி, இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவருடைய மனைவி ரமா, மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் உலக அளவில் கொண்டாடப்படும் விருதை, தென்னிந்திய படமான 'ஆர் ஆர் ஆர்' பெற்றுள்ளதற்கு, ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.